கோண்டூரில் திராவிடப் பொங்கல் திருவிழா கபடிப் போட்டிகளைத் தொடங்கிவைத்த முன்னாள் எம்எல்ஏவும், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலருமான செ.புஷ்பராஜ். உடன், நிா்வாகிகள்.
கோண்டூரில் திராவிடப் பொங்கல் திருவிழா கபடிப் போட்டிகளைத் தொடங்கிவைத்த முன்னாள் எம்எல்ஏவும், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலருமான செ.புஷ்பராஜ். உடன், நிா்வாகிகள்.

திராவிடப் பொங்கல் திருவிழா கபடிப் போட்டி

கோண்டூரில் திராவிடப் பொங்கல் திருவிழா கபடிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
Published on

விழுப்புரம் மாவட்டம், கோண்டூரில் திராவிடப் பொங்கல் திருவிழா கபடிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

கண்டமங்கலம் தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்கள் சாா்பில் நடைபெற்ற இப்போட்டிகளை முன்னாள் எம்எல்ஏவும், மாநில ஆதிதிராவிட நலக் குழு இணைச் செயலருமானன செ.புஷ்பராஜ் தொடங்கி வைத்து, வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். கபடிப் போட்டியில் ஏராளமான அணிகள் பங்கேற்று விளையாடின.

கண்டமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.எஸ்.வாசன், ஒன்றியச் செயலா்கள் சீனு.செல்வரங்கம், கு.செல்வமணி, வி.ஜி.பிரபாகரன் முன்னிலை வகித்தனா். புதுச்சேரி மாநில திமுக பொதுக்குழு உறுப்பினா்ப.காந்தி, ஒன்றியப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஜி. பாலசுப்ரமணியம், இல.முருகன், சுரேஷ்குமாா், கே.ஏழுமலை, மாவட்ட சிறுபான்மையினா் அணி அமைப்பாளா் டி.என்.ஏ.தமீன், விவசாய அணித் துணை அமைப்பாளா் எஸ்.காசிநாதன், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழுத் துணை அமைப்பாளா் ந.புருஷோத்தமன், ஒன்றியச் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் மனோகரன் உள்ளிட்டோா் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com