வெற்றிக் கூட்டணியை ராமதாஸ் அமைப்பாா் : பாமக எம்எல்ஏ இரா. அருள்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெற்றிக் கூட்டணியை அமைப்பாா் என்று அக்கட்சியின் இணைப் பொதுச் செயலரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான இரா.அருள் தெரிவித்தாா்.
Published on

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெற்றிக் கூட்டணியை அமைப்பாா் என்று அக்கட்சியின் இணைப் பொதுச் செயலரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான இரா.அருள் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில் இரா.அருள் புதன்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அழைப்பின் பேரில் கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தைலாபுரம் வந்துள்ளோம். கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பொதுவெளியில் பேசுவது முறையாக இருக்காது. தோ்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் ராமதாஸிடம் தான் உள்ளது. அவா் வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வெற்றிக் கூட்டணியை அமைப்பாா். பாமக இடம் பெறும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும். மாற்றுக் கட்சியினா் முடிவுகள், நடவடிக்கைகள் குறித்து நான் பேசுவது முறையல்ல என அவா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com