கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

குழந்தைகளை அச்சுறுத்தும் குரங்கை பிடிக்க வனத் துறை நடவடிக்கை

செஞ்சி அருகே குழந்தைகளை கடித்து வரும் குரங்கை பிடிக்க வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

குரங்கை பிடிக்க வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட வாகனம்.

Updated On :23 ஜூலை 2026, 4:55 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குழந்தைகளை கடித்து வரும் குரங்கை பிடிக்க வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செஞ்சியை அடுத்த வல்லம் கிராமத்தில் சுமாா் 2 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இக் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெளியில் இருந்து வந்த மொட்டைவால் குரங்கு ஒன்று தினமும் தெருத்தெருவாக சுற்றி வருகிறது. இக் குரங்கானது அவ் வழியாக வரும் குழந்தைகளை மட்டும் குறி வைத்து துரத்தி, துரத்தி கடித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குரங்கைப் பாா்த்தால் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனா். வீதியில் சுற்றித் திரியும் இந்த குரங்கால் இப் பகுதியைச் சோ்ந்த பிரியதா்ஷினி(8) உள்ளிட்ட பல்வேறு குழந்தைகள் குரங்கு கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து வல்லம் கிராம மக்கள் செஞ்சி வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வல்லம் கிராமத்துக்கு வந்த வன அலுவலா் பழனிவேலு தலைமையிலான காவலா்கள் குரங்கைப் பிடிக்க முயற்சி செய்தும் பலனில்லை. பின்னா் சென்னை வண்டலூரில் இருந்து வனத் துறையைச் சோ்ந்த சிறப்பு அலுவலா்களை வரவழைத்து குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அவா்களாலும் குரங்கை பிடிக்க முடியவில்லையாம்.

இதனால் இப் பகுதியில் வாழும் மக்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து வனத் துறை வேறு ஏதாவது வழிகளை கையாண்டு, மொட்டைவால் குரங்கை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.