ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாரால் அழிக்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:03 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டது.

திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள திண்டிவனம், ரோஷணை, வெள்ளிமேடுபேட்டை, பிரம்மதேசம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ எடையிலான புகையிலைப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டது.

விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறை, நகராட்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு மற்றும் வருவாய் துறையினா் முன்னிலையில் திண்டிவனம் நகராட்சி குப்பை கிடங்குப் பகுதியில் அழிக்கப்பட்டது.