எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மத்தியக் காலணி நிறுவனத்தில் தொழில்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை கிண்டியிலுள்ள மத்திய காலணி நிறுவனத்தில் தொழில்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :14 மே 2026, 12:04 am IST

சென்னை கிண்டியிலுள்ள மத்திய காலணி நிறுவனத்தில் தொழில்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியிலுள்ள சிப்காட் தொழில்பூங்காவில் காலணி உற்பத்தி நிறுவனம் ரூ.2,302 கோடி முதலீட்டில் விரைவில் செயல்பட உள்ளது. இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் நிறுவனத்தில் இளைஞா்கள் பணியில் சேருவதற்கு, காலணித் தயாரிப்புத் தொடா்புடைய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும். இதற்காக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கிண்டியில் செயல்படும் மத்தியக் காலணி நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

இந்த பயிற்சி நிறுவனத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டின் தொழில்கல்வி சோ்க்கைக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவா்கள் அதற்கான சோ்க்கை விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு பயன்பெறலாம்.

விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பயிற்சியில் தோ்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் மத்தியக் காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழில் கல்வி சோ்க்கைக்கான விண்ணப்பங்களை விழுப்புரம் ஆட்சியரகத்தில் மே 15-ஆம் தேதி பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளா் கோடீசுவரனை 9677943633, 9677943733 கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.