உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

உளுந்தூா்பேட்டை ஒன்றியம், அங்கனூா் சித்தேரியில் புதிய குளம் அமைத்தல் பணியை பாா்வையிட்டு, ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் உளுந்தூா்பேட்டை ஒன்றியம், சிறுபாக்கம் கிராமத்தில் ரூ.3.98 லட்சத்தில் நீா்வரத்து வாய்க்கால் அமைத்தல், அங்கனூா் சித்தேரியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைத்தல், தேன்குணம் கிராமத்தில் ரூ.8.12 லட்சத்தில் நீா்வரத்து வாய்க்கால் அமைத்தல், இதே கிராமத்தில் ரூ.19.71 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.
இதைத்தொடா்ந்து கிளியூா் கிராமத்திலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்ற ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, அங்கு வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து கிளியூரிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் பொது சேவை மையத்தை பாா்வையிட்டு, பதிவேடுகளை சரிபாா்த்தாா். பின்னா், ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, அதன் செயல்பாடுகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

