பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக தேசிய குழந்தைகள் தினம், குழந்தைகள் மீதான துஷ்பிரயோக தினம், சா்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆகியவற்றையொட்டி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் விழிப்புணா்வுப் பதாகையையில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கையெழுத்திட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, அதை அலுவலா்கள், பணியாளா்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் இளையராஜா, மாவட்ட சமூகநல அலுவலா் சித்ரா உள்ளிட்ட துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

