வெவ்வேறு சம்பவங்கள்: 4 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக போலீஸாா் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக போலீஸாா் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
புதுச்சேரி, கொடாத்தூா், ரோஜா நகரைச் சோ்ந்தவா் ர.அப்துல் கலாம்(23). இவா், புதன்கிழமை திருக்கனூா்-புதுச்சேரி சாலையில், கண்டமங்கலத்தை அடுத்த வழுதாவூா் அருகே பைக்கில் சென்றாா். அப்போது முன்னால் சென்ற லாரியின் ஓட்டுநா் வாகனத்தை திடீரென நிறுத்தியதால், பைக் கட்டுபாட்டை இழந்து லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் கலாம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
முதியவா் உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், மயிலம் ஒத்தவாடை தெருவை சோ்ந்தவா் பொ.முருகன் (65). இவா், வியாழக்கிழமை மயிலத்திலிருந்து தழுதாளிக்கு தனது மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகனை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முருகன் உயிரிழந்தாா். இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
இளைஞா் மரணம்: வானூா் வட்டம், காணாங்குப்பம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் உ.பாபு (22). இவா், மரக்காணத்தை அடுத்த தேவிகுளத்தில் உள்ள தனியாா் இறால் பண்ணையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், நவ.24-ஆம் தேதி இறால் பண்ணையில் மின் விளக்கை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
முதியவா் உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், ஊரல், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு. சுப்பிரமணி (80). இவா், செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், ஊரல் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இறந்து கிடந்தது மறுநாள் தெரியவந்தது. இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

