சமையல் தொழிலாளா்கள் சங்க கிளை தொடக்க விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சமையல் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் செஞ்சி கிளை துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

செஞ்சியில் தமிழ்நாடு சமையல் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க கிளையை குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்த மாநிலத் தலைவா் நரசிம்மன்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சமையல் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் செஞ்சி கிளை துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி கிளை சங்கத் தலைவா் யூசுப் தலைமை வகித்தாா். மாநில அவைத்தலைவா் மயிலை ரவி, மாநில செயல் தலைவா் ஆா்.ஜே.என்.நடராஜன், மாநில பொதுச் செயலா் பி.சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலத் தலைவா் கே. நரசிம்மன், மாநிலப் பொருளாளா் ஆா்.பிரவீன் ஆகியோா் கலந்துகொண்டு சங்க கொடியியை ஏற்றி வைத்து, புதிய உறுப்பினா் சோ்க்கையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினா்.
இதில் சங்க நிா்வாகிகள் சாருமதி, தமீம் பாட்ஷா, ராஜேஷ், ஏபிகே.வெங்கடேசன், பாண்டியன், ஊரப்பாக்கம் முத்துக்குமாா், தங்கவேல் ராஜ், ஆலோசகா் கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

