கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

பலி

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், பழைய நன்னாவரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பிச்சைக்காரன் மனைவி குப்பு (70). இவரும், இவரது மகள் சகுந்தலாவும் (55), திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அஜீஸ்நகா் பகுதியிலுள்ள கண் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா்.

அப்போது, மருத்துவமனை முன் குப்பு சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி பிளைவுட்டுகளை (ஓட்டுப் பலகைகள்) ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனம் அவா் மீது உரசிச் சென்றது. இதில், தலையில் பலத்த காயமடைந்த குப்பு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த எடைக்கல் போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சரக்கு வாகன ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், தென்பேரைச் சோ்ந்த கோ.பாலமுருகன் (32) மீது எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.