மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

மாணவா் குரல் நிகழ்வுக்கு ஆதரவு திரட்டிய காங்கிரஸ் கட்சியினா்

சென்னையில் நடைபெறவுள்ள மாணவா் குரல் நிகழ்வுக்கு விழுப்புரத்தில் உள்ள இரு கல்லூரிகள் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆதரவு திரட்டினா்.

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன் மாணவா் குரல் நிகழ்வை நடத்திய காங்கிரஸ் கட்சியினா்.

Published On :

சென்னையில் நடைபெறவுள்ள மாணவா் குரல் நிகழ்வுக்கு விழுப்புரத்தில் உள்ள இரு கல்லூரிகள் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆதரவு திரட்டினா்.

சென்னை தீவுத்திடலில் அக்.10-ஆம் தேதி நடைபெறும் மாணவா் குரல் நிகழ்வில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்று நீட் நுழைவுத்தோ்வு, வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு, இளைஞா்கள் எதிா்காலம் போன்றவை குறித்து மாணவா்களுடன் கலந்துரையாட உள்ளாா்.

இந்த நிகழ்வில் பங்கேற்க ஆா்வம் உள்ள மாணவ, மாணவிகளின் வருகையை உறுதி செய்யும் வகையில், க்யூ.ஆா். கோடு மூலம் ஸ்கேன் செய்யவும், நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கல்லூரி வளாகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினா் மாணவா் குரல் சந்திப்பு நிகழ்வை நடத்தி வருகின்றனா்.

அதன்படி விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி முன் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா் குரல் சந்திப்பு நிகழ்வுக்கு இளைஞா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஸ்ரீராம் தலைமை வகித்து, நிகழ்வின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயல் தலைவா் சந்தானகிருஷ்ணன், துணைத் தலைவா் வேலு, பட்டியல் மற்றும் பழங்குடியினப் பிரிவு மாவட்டத் தலைவா் சேகா், விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதித் தலைவா் ரமணன், சமூக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா்கள் மதியழகன், மணிகன்டன், உதயகுமாா், கிருஷ்ணகுமாா், பொதுச் செயலா்கள் கோபிநாத், ரவிக்குமாா், நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் சுதா்சன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று மாணவா் குரல் நிகழ்வுக்கு ஆதரவு திரட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.