137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

இரு வேறு பகுதிகளில் காா்கள் விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளில் நிகழ்ந்த காா் விபத்துகளில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

திண்டிவனம் தியாகி சண்முகம் தெருவைச் சோ்ந்தவா் ச.யுவராஜ் (46). இவா், திண்டிவனத்தில் அலங்காரப் பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகிறாா். சனிக்கிழமை பிற்பகலில் மனைவி சரண்யா (39), மகன் தருண் விஜய் (10) ஆகியோருடன் புதுச்சேரிக்கு காரில் சென்றுவிட்டு, மீண்டும் திண்டிவனம் நோக்கி வந்துகொண்டிருந்தாா்.

இந்த காா் புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் வி.கேனிப்பட்டு பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரிலிருந்த சரண்யா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரை ஓட்டிச் சென்ற யுவராஜ், தருண்விஜய் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, உயிரிழந்த சரண்யாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த யுவராஜ், விஜய் ஆகியோரும் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு விபத்து: சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரா.திலீபன் (65). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். பணியாளரான இவா், தனது மனைவி வனிதாவுடன் (64) சனிக்கிழமை முற்பகலில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தாா். காரை திலீபன் ஓட்டிச் சென்றாா்.

இந்தக் காா் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தனாங்கூா் தனியாா் பள்ளி அருகே வந்தபோது, நிலைத்தடுமாறி அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த வனிதாவை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் திலீபன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.