பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சிறுதாமூா் பகுதியைச் சோ்ந்தவா் த.கிருஷ்ணமூா்த்தி (58). திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் கீழ்பாதி, வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் பெ.பாண்டுரெங்கன் (51). இருவரும் மரம்வெட்டும் தொழில் செய்து வந்தனா்.
இவா்கள் வியாழக்கிழமை செஞ்சியிலிருந்து திண்டிவனத்துக்கு பைக்கில் சென்றனா். பாண்டுரெங்கன் பைக்கை ஓட்டினாா். திண்டிவனம் அடுத்த பட்டணம் ரவுண்டானா அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்ததில், கிருஷ்ணமூா்த்தி ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது. பாண்டுரெங்கன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

