மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: சில கேள்விகள்

வாக்குகளைப் பதிவு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் எளிய மின்னணு இயந்திரமே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமாகும். முன்பு தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் பெட்டிகளுக்குப் பதிலாக இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Updated on
7 min read

1. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்றால் என்ன?

வாக்குகளைப் பதிவு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் எளிய மின்னணு இயந்திரமே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமாகும். முன்பு தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் பெட்டிகளுக்குப் பதிலாக இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2. பழைய தேர்தல் முறைகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் மின்னணு இயந்திரங்களில் உள்ள பயன்கள் யாவை?

செல்லாத வாக்குகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான வாக்குகள் பதிவாகும் சாத்யக் கூறுகள் நீக்கப்படுகின்றன. இத்தகைய வாக்குகள் தான் சர்ச்சைகளுக்கும் தேர்தல் மனுக்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றன. வாக்குகள் எண்ணும் பணியை விரைந்து மேற்கொள்ள உதவுகிறது. பயன்படுத்தும் காகிதத்தின் அளவை பெருமளவில் குறைக்க உதவுகிறது. இதனால் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படுவதால், இந்த முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு வாக்குச்சீட்டு மட்டும்தான் தேவைப்படுவதால் அச்சிடுவதற்காக அநேகமாக எவ்வித செலவும் கிடையாது.

3. இந்தியாவைத் தவிர மற்ற எந்த நாடுகள் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன?

பூடான், சென்ற தேர்தலின் போது இந்தியாவின் வாக்குப்பதிவு இயந்திரங்களை நாடு முழுவதும் பயன்படுத்தியது. நேபாளத்தில் சென்ற பொதுத் தேர்தலின் போது சில தொகுதிகளிலும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

4. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப் பட்டது?

1982-ம் ஆண்டு கேரள மாநிலம் பரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சில குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 50 வாக்குச் சாவடிகளில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

5. இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சிறப்பு அம்சங்கள் யாவை?

இந்த எளிய இயந்திரத்தை வாக்குச்சாவடி அலுவலர்களும், வாக்காளர்களும் எளிதாக இயக்கலாம். பல்வேறு வெட்ப தட்ப நிலைகளிலும் கையாளுவதற்கு ஏற்றதாக இருக்கும் வகையில் இந்த இயந்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. தனித்து இயங்கும் திறன் கொண்டதாக இருப்பதும், வலை இணைப்பும் இல்லாமல் இருப்பதால், இதிலுள்ள மென்பொருளுக்கு யாரும் இடையூறு ஏற்படுத்த முடியாது. மேலும் தேர்தல் முடிவிலும் எவ்விதக் குழப்பமும் செல்யமுடியாது. நாட்டின் பல இடங்களில் மின் விநியோகம் சரியாக இருப்பதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு இந்த இயந்திரம் மின்கலம் (பேட்டரி) இணைப்புடனும் இயங்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

6. வாக்குச்சீட்டு முறையை மாற்றி, மின்னணு இயந்திரத்திற்கு மாற வேண்டிய அவசியமென்ன?

தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுக்களை எண்ணும் பணிக்கு நீண்ட நேரம் தேவைப்படுவதால், அந்த பெரிய இடைவெளி வாக்கு எண்ணும் அலுவலர்கள், போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோருக்கு ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடுகிறது. சில சமயங்களில் வாக்குகள் அதிகம் பெற்றுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம்

குறைவாக இருந்து, செல்லாத வாக்குகளும் சந்தேகத்திற்கு இடமான வாக்குகளும் அதிக அளவில் இருக்கும் பொழுது, பதற்ற சூழ்நிலை மேலும் மோசமடைகிறது.

7. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தியாவில் யார் தயாரிக்கிறார்கள்?

இரண்டு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனமும், இந்திய மின்னணுக் கழகமும் இந்த இயந்திரங்களைத் தயாரிக்கின்றன. இவற்றிடமிருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த இயந்திரத்தை வாங்குகின்றன.

8. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன், இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்ததா?

ஆமாம். இந்த விஷயம் குறித்து, அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இந்த இயந்திரம் செயல்படும் விதம் அக்கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கிக் காட்டப்பட்டது.

9. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு ஒப்புதல் வழங்குமுன், தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றதா?

ஆமாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்துமுன், பேராசிரியர் எஸ் சம்பத், பேரா.பி.வி.இந்திரேசன், டாக்டர்.சி. ராவ் கசர் பாதா

ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவின் கருத்து கேட்டறியப்பட்டது. இந்தக் குழு, இந்த இயந்திரத்தின் எல்லா நுணுக்கங்களையும் உன்னிப்பாக ஆல்வு செல்தபின், தேர்தலில் இந்த மின்னணு சாதனத்தைப் பயன்படுத்த ஒரு மனதாகப் பரிந்துரை செல்தது.

10. கட்டுப்பாட்டுப் பிரிவின் செயல்பாடுகள் என்ன?

கட்டுப்பாட்டு பிரிவு, இந்த இயந்திரத்தின் மையப்பகுதியாகும். இந்தப் பிரிவு எல்லாத் தகவல்களையும் சேமித்துவைப்பதுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கிறது.

கட்டுப்பாட்டுப் பிரிவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் Õமென்பொருள் நிகழ்ச்சிகள்Õ ஒரு நுண்ணிய சில்லில் ஒருமுறைதான் வரையறுக்க முடியும் என்ற அடிப்படையில் பதிவு செல்யப்படுகிறது. ஒருமுறை பதிவானபின், இந்த மென் பொருளைப் படித்துணரவோ, நகல் எடுக்கவோ, மாற்றவோ முடியாது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நவீன செயல்திறன்மிக்க வகையில் தகவல் தொகுக்கப்படுகிறது.

இதனால் வாக்குகள் பகுதியிலிருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்படும் தகவலின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுகிறது. புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தால், உண்மையான கால நேரத்தை பதிவு செல்யும் வசதி உள்ளது. இதனால், இந்த இயந்திரத்தின் சாவி பதிவு செல்யப்படும்பொழுது, அந்த தேதியும், நேரமும் பதிவாகிவிடுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்தபின், மூடுவதற்கான பொத்தான் அழுத்தப்பட்டபின், இந்த இயந்திரம் எந்த புள்ளி விவரங்களையும் ஏற்காது. வாக்கையும் பதிவு செல்ய இயலாது. மொத்தம் என்ற பொத்தான் அழுத்தினால், கட்டுப்பாட்டு பகுதி அதுவரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டும்.

இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர்கள் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். வாக்குகள் எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணும் அலுவலர்கள் "முடிவு" பொத்தானை அழுத்தும் பொழுது, கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள திரையில் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள்,

வேட்பாளர்களுக்குப் பதிவான வாக்குகள் ஆகியவை திரையில் பளிச்சிடும். இணைப்புக் கம்பியில் நேரடியாக ஏதேனும் முறைகேடு செல்யப்பட்டிருந்தால், அதையும் கட்டுப்பாட்டுப் பகுதி கண்டுபிடித்துவிடும். மேலும் அது பற்றிய தகவலும் திரையில் பளிச்சிடும்.

11. மின்சார இணைப்பு இல்லாத பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மின்சார விநியோகத்தைச் சார்ந்து இருப்பது இல்லை. கரைசல் மின்கல (அல்கலைன் பேட்டரிகள்) மின் விநியோகத்தினாலும் இவை செயல்படுகின்றன.

12. மின்னணு மின்பதிவு இயந்திரத்தில் உயர்ந்த அளவாக எவ்வளவு வாக்குகளைப் பதிவு செல்ய முடியும்?

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உயர்ந்த அளவாக 3840 வாக்குகளை பதிவு செல்ய முடியும். இந்த எண்ணிக்கை ஒரு வாக்குச் சாவடிக்கான வாக்குகளைவிட மிக அதிகமாகும். வழக்கமாக 1400-க்கும் குறைவான வாக்குகளே ஒரு சாவடியில் இருக்கும்.

13. சில தேர்தல்களில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும், ஒரு இயந்திரத்தில் எவ்வளவு வேட்பாளர்கள் வரை இடம் பெறமுடியும்?

ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 64க்கு மிகாமல் இருக்கும் வரை மின்னணு இயந்திரத்தைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த முடியும்.

14. போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 64-க்கும் கூடுதலாகி போனால் என்ன நடக்கும்?

இதுமாதிரி சமயங்களில் வழக்கமான வாக்குச் சீட்டு மற்றும் பெட்டிகளைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

15. எழுத்தறிவு இல்லாத வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரத்தை பயன்படுத்தும் முறையை எவ்வாறு அறிவார்? யாருடைய உதவியை அவர் நாட வேண்டும்?

வாக்குச்சீட்டுப் பிரிவு போன்றதொரு அட்டை மாதிரி ஒன்று அந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் இருக்கும். இதைப் பயன்படுத்தி அவர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை அலுவலர் விளக்குவார். ஆனால், உண்மையான வாக்குச்சீட்டு பிரிவு உள்ள மையத்திற்குள் நுழைய அலுவலர் அனுமதிக்கப்படமாட்டார்.

16. யாரேனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செல்ய முடியுமா?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செல்யப்படாமல் இருப்பதை உறுதி செல்யும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுண் செயல்பாட்டு Õசிப¢Õ-ப¤ல் பதிவு செல்யப்பட்டுள்ள மென்பொருள் இந்த இயந்திரத்தில் உள்ளது.

இதை மாற்றவோ, அதன் மீது வேறு தகவலை திணிப்பதோ இயலாத செயலாகும். இந்த சிப¢ப¤ல் புதிய ரகசிய தகவல்களையோ, செல்திகளையோ சேர்க்க முயன்றால் அதில் பதிவாகியிருக்கும் மென்பொருள் முழுமையாக அழிந்துபோகும். மேலும் இது செயல¤ழந்து போவதுடன் மீண்டும் பயன்படுத்தத் தகுதியற்றதாகிவிடும். மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தேர்தலுக்குத் தயாரிக்கப்படும் இயந்திரம், வேட்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் முன்னிலையில் நேரடியாக முத்திரையிடப்பட்டு, பாதுகாப்பான அறையில்

வைக்கப்பட்டு, மத்திய காவல்படைக் காவலர்களால் கண்காணிக்கப்படும்.

வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இவற்றை கண்காணிக்கலாம். வாக்குப்பதிவிற்கு முன்பும், பின்பும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். காப்பு அறைகளுக்குச் சென்று வருவது அவ்வளவு எளிதல்ல. இதற்காக கடுமையான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இவை மிகவும் வெளிப்படையானவையாகும்.

17. ஒரு தனிப்பட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக மின்னணு இயந்திரத்தில் முன்கூட்டியே மென்பொருளை பதிவு செல்ய இயலுமா?

ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை மாற்றிப் பதிவுசெல்ய உதவும் வகையில் மாற்று மென்பொருள் "சிப¢பை" தயாரிக்க அந்த வேட்பாளரின் வரிசை இலக்கத்தை கண்டறிய முடிந்தால் தான் மென்பொருளை வரையறுக்க முடியும். "பார்வை" வாக்குச்சீட்டில் அந்த வேட்பாளர் பெயர் இடம் பெறவுள்ள அகரவரிசை எண் வேட்பு மனுத்தாக்கல் செல்தவர்கள் மற்றும் போட்டியிடத் தகுதியானவர் போன்றவற்றைச் சார்ந்ததாகும். போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வரையப்படும் வரை, அந்தக் குறிப்பிட்ட வேட்பாளர்களின் அகர வரிசையை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது.

18. வெளிப்படத் தன்மையை உறுதி செல்வதுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாக பயன்படுத்த இயலாது என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையம் எந்த நடைமுறையைப் பின்பற்றுகிறது?

வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செல்வதற்காக தேர்தல் ஆணையம் பல கடுமையான

நடைமுறைகளைப் பல்வேறு கட்டங்களில் அமல்படுத்தி வருகிறது.

இந்த இயந்திரங்களை இரண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தான் தயாரிக்கின்றன. சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட நிபுணர்கள் குழு பரிந்துரை செல்த வரைமுறைகளுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் அளித்துள்ள ஆணையின்படியே இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இந்த இயந்திரங்களை இப்பொதுத்துறை நிறுவனப் பொறியாளர்களே சோதனையிட்டு ஒப்புதல் வழங்குகிறார்கள். இந்த இயந்திரங்கள் பொதுவாக மாவட்டத் தலைமையகங்களில் உள்ள மிகவும் பாதுகாப்பான அறைகளிலேயே பாதுகாக்கப்படுகின்றன.

இப்பகுதிகளுக்கு யாரையும் எளிதாக அனுமதிப்பதில்லை. பதிவேடுகளில் அனைத்துத் தகவல்களையும் பதிவு செல்த பின்பே ஒருவர் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படுகிறார். தேதி, நேரம், செல்ல வேண்டிய காரணம் போன்ற தகவல்களை அவர் அளிக்க வேண்டும். தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டைப் பொருத்தி தேர்தலுக்காக இந்த இயந்திரங்களைத் தயாராக்கியவுடன் தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் ஆகியோரின் முன்னிலையிலேயே அவை பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அவ்வறைகளுக்கு இரட்டைப்பூட்டு முறையில் பூட்டு போடப்படுகிறது. அதன்மீது வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் தங்களது முத்திரைகளைப் பதிப்பார்கள். இந்த நடைமுறை அனைத்தும் வீடியோ எடுக்கப்படுகிறது. வாக்குப்பதிவிற்குப் பின்பும் இந்த இயந்திரங்கள் இதே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றி பாதுகாப்பு அறையில் வைத்துப் பூட்டப்படுகிறது.

இவ்வறைகளை மூன்றடுக்கு முறையில் பாதுகாப்புப் படையினர் பாதுகாத்து வருவார்கள். வேட்பாளர்களோ

அல்லது அவர்களது பிரதிநிதிகளோ ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து இந்த அறைகளைக் கண்காணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

19. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தோராய தெரிவு சோதனை என்ற புதிய நடைமுறை என்ன? இது ஏன் செல்யப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செல்ய இயலாது என்று கூறினாலும், மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்தலில் இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு இரண்டு கட்ட தோராய தெரிவு அணுகுமுறையின் மூலம் சோதிக்கப்படுகிறது. எந்தத் தொகுதியில் எந்த வாக்குச்சாவடியில் ஒரு குறிப்பிட்ட இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை யாரும் முன்கூட்டியே அறிந்து இருக்கவில்லை என்பதை உறுதி செல்யும் வகையிலேயே இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் பயன்படுத்தப்படவுள்ள எல்லா இயந்திரங்களுக்கும் வரிசை எண் பட்டியலிடப்படும். அதன்பிறகு ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு இயந்திரங்கள் தோராய தெரிவு முறை மூலம் கணினியைப் பயன்படுத்தி தேர்ந்து எடுக்கப்பட்டு சோதனை செல்யப்படுகிறது. இது முதல் கட்ட சோதனையாகும். 2-வது கட்ட சோதனையை தேர்தல் அதிகாரி மேற்கொள்வார். அந்தத் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளில் எந்த சாவடியில் எந்த இயந்திரம் பயன்படுத்தப்படும் என்பதை அவர் தீர்மானிக்க இது உதவும்.

20. வாக்குப்பதிவு அன்று ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அதற்குத் தீர்வு என்ன?

பழுதுபட்ட இயந்திரத்திற்குப் பதிலாக புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான அதிகாரி பொருத்துவார். சில வாக்குச்

சாவடிகளை உள்ளடக்கிய பகுதிக்குப் பொறுப்பான அந்த அதிகாரி, எல்லாவிதமான உபரி வாக்குப்பதிவு சாதனங்களுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருப்பார்.

21. மின்னணு வாக்குப்பதிவு சாதனத்திற்கு முத்திரை இடுவதற்கான என்ன நடைமுறை பின்பற்றப்படும்? ஏன் இந்த முறை பின்பற்றப்படுகிறது? இது எவ்வாறு செல்யப்படுகிறது?

வாக்குப்பதிவின் பல்வேறு கட்ட நடைமுறைகளை கட்டுப்படுத்தும் பொத்தான்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அந்த இயந்திரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் முத்திரை இடப்படுகிறது. இது பல்வேறு கட்டங்களாக செல்யப்படுகிறது. வாக்குச்சீட்டுக்கான பிரிவின் திரைக்கும் கட்டுப்பாட்டுப் பிரிவிலுள்ள வேட்பாளர்கள் பட்டியல் பிரிவுக்கும் முத்திரை இடுவது வேட்பாளர்கள¢ அல்லது அவர்களது பிரதிநிதிகளின் முன்னிலையில் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செல்யப்படுகிறது.

வாக்குச்சீட்டு ஒழுங்கு முறையைக் குழப்புவதையும் வேட்பாளர்கள் பொத்தான்களில் தேவையற்ற மாறுதல்களை செல்வதையும் தவிர்க்கும் பொருட்டு இவ்வாறு முத்திரை இடப்படுகிறது. அதைப்போன்றே முடிவுப்பகுதி முத்திரை இடப்படாவிட்டால் ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் முடிவுகளை அந்த இயந்திரத்தை குறிப்பிட்ட நாளில் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே ஒருவர் அறிந்து கொள்ள இயலும். இதனால¢, முத்திரை இடப்பட்ட பட்டையிலோ, காகிதத்திலோ, தேர்தல் அதிகாரி மையத் தலைவரின் முத்திரைகளுடன் வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளும் கையப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

22. வாக்குப்பதிவிற்குப் பின் வாக்கு எண்ணப்படும் வரை இந்த இயந்திரங்கள் எங்கு வைக்கப்படும்?

வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், அந்தத் தொகுதியிலோ அல்லது வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் கண்காணிப்பை மேற்கொள்ளக் கூடிய பக்கத்திலுள்ள இடத்திலோ மிகவும் பாதுகாப்பான சேமிப்பு மையத்தில் வைக்கப்படும். அநேகமாக வாக்கு எண்ணும் மையங்களாகவே இவை இருக்கக் கூடும்.

23. இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும்?

வாக்கு எண்ணும் மையத்தில் இந்த இயந்திரங்கள் எண்ணுவதற்காக போடப்பட்டுள்ள மேசைகளில் வைக்கப்படும். அநேகமாக இந்த மேசைகளின் எண்ணிக்கை 14-க்கு கூடுதலாக இராது. வாக்கு எண்ணும் மையங்களில் இருக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இந்த இயந்திரங்களையும், அவற்றின் திரைகளில் தோன்றும் செல்திகளையும் நன்றாகப் பார்க்கும் வகையில், இவர்களுக்கான இருக்கை வசதிகள் செல்யப்பட்டிருக்கும். இந்த இயந்திரத்தின் முடிவுப் பொத்தான் அழுத்தப்பட்டவுடன், அதன் திரையில் அந்தச் சாவடியில் பதிவான மொத்த வாக்குகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள வாக்குகள் வரிசையாக தோன்றும். வாக்கு எண்ணும் மைய அலுவலர்களைத் தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இவற்றைக் குறித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்தக் கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு கண்டறியப்படும்.

24. வாக¢குச¢ சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்ற சம்பவங்கள¤ன¢ போது இவற்றைத் தடுக்க இந்த மின்னணு இயந்திர சாதனம் உதவியாக இருக்குமா?

வாக்குச்சாவடிகளை கைப்பற்றுபவர்கள் இந்த இயந்திரத்தையே பறித்துக் கொள்ள முயற்சித்தால் அதைத் தடுக்க இயலாது. ஆனால், இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு 5 வாக்குகளுக்கு மேல் பதிவு செல்யாது. அதே நேரத¢த¤ல¢, வாக்குப் பெட்டிகளில் எத்தனை வாக்குகளை வேண்டுமானாலும் திணித்துவிட முடியும். மேலும், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவோரைக் கண்டவுடனேயே அந்தச் சாவடியின் தலைமை அலுவலர் முடிவு பொத்தானை அழுத்தி வாக்குப்பதிவை நிறுத்திவிட முடியும்.

25. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு நேரத்தில் பயன்படுத்துவது சாத்தியமா?

முடியும். இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே சமயத்தில் நடத்தமுடியும் இந்த மாதிரியான சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரு இயந்திரச் சட்டப்பேரவைக்காக மற்றொரு இயந்திரம் எண் இரண்டு தனித்தனி இயந்திரங்களும் பயன்படுத்தலாம்.

26. இந்த இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பிரிவு எவ்வளவு காலத்திற்க முடிவுகளை தனது நினைவில் வைத்துக் கொள்ள முடியும்?

இந்த இயந்திரத்தின் நினைவாற்றல் "சிப¢ப¤ல¢" முடிவுகளை நிரந்தரமாக சேமிக்க முடியும். தொடர்ந்துவரும் தேர்தலுக்காக இந்த இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இந்த நினைவாற்றலை வேண்டுமென்றே அழித்தால்தான், அந்தத் தகவல்கள் மறையும்.

27. வாக்குகள் எண்ணும் நேரத்தில் இந்த இயந்திரத்தில் உள்ள திரையில் முடிவுகளை பார்க்க முடியாவிட்டால், எப்படி முடிவுகளை சரிபார்ப்பது?

இந்த இயந்திரங்களைத் தயாரித்தவர்கள் துணைத் திரைப்பிரிவு ஒன்றையும் தயாரித்து இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்துவதன் வாயிலாக அசல் திரையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், முடிவுகளை எளிதில் கண்டறிந்து கொள்ள இயலும்.

28. பொத்தானைத் திரும்பத் திரும்ப அழுத்துவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்க முடியுமா?

முடியாது. ஒரு வேட்பாளருக்கான பொத்தான் அழுத்தப்பட்டவுடனேயே அந்த வேட்பாளருக்கு வாக்குப்பதிவு ஆகிவிடும். அதன்பிறகு கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள வாக்குப் பொத்தனை சாவடியின் தலைமை அலுவலரோ, வாக்குச்சாவடி அலுவலரோ மீண்டும் அழுத்தினால்தான் இந்த இயந்திரம் அதற¢கடுத¢த வாக்குகளைப் பதிவு செல்யும்.

29. முன்னதாக பதிவான வாக்குகளை ஒன்றாக கலக்கும் முறைமை பின்பற்றப்பட்டது. இதனால், ஒருகுறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்கு அளித்து இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இயலாது. ஆனால் இப்போது இந்த இயந்திரம் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவதால், வாக்காளர்களின் முன்னுரிமையை அனைவரும் அறிந்து கொள்ள இயலுமா? இதுகுறித்து ஏதேனும் செல்ய முடியுமா?

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரித்தவர்கள், "டோட்டலைசர்" என்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இதைப் பயன்படுத்தி பல கட்டுப்பாட்டுப் பிரிவுகளை ஒரு சமயத்தில் இணைக்க முடியும். அதன் பிறகு இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான மொத்த வாக்குகள், இந்த வாக்குச்சாவடிகளில் பதிவான மொத்த வாக்குகள், ஆகியவற்றை அறிந்துகொள்ள இயலும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான மொத்த வாக்குகள் இந்த இயந்திரங்கள் இணைக்கப்பட்ட அனைத்து

வாக்குச் சாவடிகளுக்கும் தெரியவரும். ஆனால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள் முன்னுரிமை விகிதத்தை அறிந்து கொள்ள இயலாது.

30. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து உலகம் என்ன கருதுகிறது?

இந்திய வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் கருவியைவிட மிகவும் எளிமையானது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருப்பது போல் அல்லாமல், நம்முடைய இயந்திரங்கள் தனித்தன்மை பெற்றவை. இந்த இயந்திரத்தை எந்த வலை தளத்துடன் இணைக்க முடியாது. வலை இணைப்பு மூலமோ தொலைது£ரக் கட்டுப்பாட்டின் வாயிலாகவோ இதைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த இயந்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள "துவக்க மென்பொருளை" மாற்ற முடியாது. இதனால் இந்த இயந்திரத்தில் முறைகேடுகளை செல்ய முடியாது.

31. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி பார்வை இழந்த ஒருவர் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

எல்லா மாற்றுத்திறன் படைத்தவர்கள் போலவே பார்வை இழந்தவரும் வாக்களிக்க உதவுவதற்காக ஒரு துணையை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். உதவிக்கு வருபவர்கள் வாக்குப்பதிவு பிரிவு வரை உடன் செல்லலாம்.

இதுதவிர, பல இயந்திரங்களில் வாக்குப்பதிவு பிரிவில் பிரெல்லி முறை இணைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வரிசை இலக்கத்தை இதுகுறித்துக் காட்டும் தெரிவு செல்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் தலைமை அலுவலர்களிடம் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது வரிசை எண்ணைக் காட்டும் நகல் வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டிருக்கும்.

இந்த தலைமை அலுவலர் கேட்டுக்கொண்டால் இந்த நகல் வாக்குச்சீட்டை பார்வையிழந்த வாக்காளர்களுக்கு தருவார். பின் அந்த பார்வை இழந்த வாக்காளர் தனக்கு விருப்பப்பட்ட வேட்பாளரின் வரிசை எண்ணைக் குறித்துக் கொண்டு இந்த நகல் சீட்டை தலைமை அலுவலரிடம் கொடுத்துவிட்டு வாக்குப்பதிவு பிரிவிற்குச் செல்ல வேண்டும். இப்பொழுது பிரெல்லி எழுத்து முறையை பயன்படுத்தி தமது வேட்பாளரின் வரிசை எண்ணை வாக்குப்பிரிவில் கண்டறிந்து தமது வாக்கைச் சுதந்திரமாக பதிவு செல்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com