
உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி 42 மக்களவைத் தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 37 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியான சமாஜ்வாதி 34 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
பாஜக 35 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷிராம்) ஒரு இடத்தில் முன்னிலை உள்ளது.
வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி, லக்னௌவில் ராஜ்நாத் சிங், கன்னௌஜ்ஜில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மெயின்புரியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ், அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ராகுல் காந்தி, ரேபரேலியில் கிஷோரி லால் ஷர்மா ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.
பாஜகவின் அருண்கோவில், ஹேமமாலினி ஆகியோர் மீரட், மதுரா ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
பாஜகவின் ஸ்மிருதி இரானி, அஜய் மிஸ்ரா தேனி, மேனகா காந்தி, அப்னா தளம் (எஸ்) அனுப்ரியா படேல் ஆகியோர் அமேதி, கெரி, சுல்தான்பூர், மிர்சாபூர் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.