தொகுதி ஓர் அறிமுகம்: ஆயிரம் விளக்கு

மன்னர் ஆட்சிக் காலத்தில் ஆயிரம் விளக்குகள் அமைத்து வெளிச்சத்தை ஏற்படுத்தியதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.
Published on
Updated on
1 min read

* தொகுதி எண் : 20
* சிறப்புகள்
 மன்னர் ஆட்சிக் காலத்தில் ஆயிரம் விளக்குகள் அமைத்து வெளிச்சத்தை ஏற்படுத்தியதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. சென்னையின் மையப் பகுதியில் உள்ளது. 1952-இல் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 13 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது.
 14-ஆவது முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக 8 முறையும், அதில் மு.க.ஸ்டாலின் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளதால் வி.ஐ.பி. அந்தஸ்து உள்ளது.
 முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்திக், ராதாரவி உள்ளிட்டோர் இந்தத் தொகுதியில் உள்ளனர். அண்ணா மேம்பாலம், அண்ணா அறிவாலயம், காமராஜர் அரங்கம், அதிமுக தலைமை அலுவலகம், செம்மொழி பூங்கா, அமெரிக்க தூதரகம், ஆயிரம் விளக்கு மசூதி, வள்ளுவர் கோட்டம், மத்திய அரசு நிறைந்த சாஸ்திரி பவன், டிபிஐ அலுவலகம், சுதந்திரதின பூங்கா, மூப்பனார் நினைவகம் ஆகியன தொகுதியில் உள்ள முக்கிய இடங்கள்.
* எல்லைகள்
 எழும்பூர், தியாகராஜநகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், சைதாபேட்டை ஆகிய சட்டப் பேரவை தொகுதிகள் இதன் எல்லைகளாக உள்ளன.
* அடங்கியுள்ள பகுதிகள்
 மாநகராட்சி மண்டலம் 9-இல் அடங்கியுள்ள வார்டு எண் 76 முதல் 78 வரை, 107 முதல் 110 வரை, 112 முதல் 114 வரையில் உள்ள பகுதிகள்.
* வாக்களர்கள் எண்ணிக்கை
 ஆண்கள் - 1,19,944
 பெண்கள் - 1,23,364
 திருநங்கைகள் - 78
* வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை - 240
இதுவரை சட்டப்பேரவை உறுப்பினர்கள்...
 1. 1957 ஏ,வி.பி.ஆசைத்தம்பி(திமுக)
 2. 1962 கே.ஏ.மதியழகன்(திமுக)
 3. 1967 கே.ஏ.மதியழகன்(திமுக)
 4. 1971 கே.ஏ.மதியழகன்(திமுக)
 5. 1977 எஸ்.ஜே.சாதிக்பாட்சா(திமுக)
 6. 1980 கே.ஏ.கிருஷ்ணசாமி(அதிமுக)
 7. 1984 கே.ஏ.கிருஷ்ணசாமி(அதிமுக)
 8. 1989 மு.க.ஸ்டாலின்(திமுக)
 9. 1991 கே.ஏ.கிருஷ்ணசாமி(அதிமுக)
 10. 1996 மு.க.ஸ்டாலின்(திமுக)
 11. 2001 மு.க.ஸ்டாலின்(திமுக)
 12. 2006 மு.க.ஸ்டாலின்(திமுக)
 13. 2011 பா.வளர்மதி(அதிமுக)
தேர்தல் நடத்தும் அலுவலர்- எம்.எஸ்.சங்கீதா
 (தமிழ்நாடு மூலிகைக் கழகத்தின் பொது மேலாளர்) சென்னை.
 செல்லிடப்பேசி எண்-8754456039
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com