தொகுதி ஓர் அறிமுகம்: கொளத்தூர்

தொகுதி சீரமைப்பு காரணமாக, வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில்
Published on
Updated on
1 min read

* தொகுதி பெயர்
 கொளத்தூர்
* தொகுதி வரிசை எண்
 13
* சிறப்புகள்
 தொகுதி சீரமைப்பு காரணமாக, வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும் இணைக்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உருவானது. திமுகவில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதால், முதல் தேர்தலிலேயே விஐபி தொகுதி பட்டியலில் இடம்பெற்றது, கொளத்தூர்.
 சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ரெட்டேரியின் ஒரு பகுதி இந்தத் தொகுதியில் உள்ளது. அனைத்து சமுதாய மக்களும் இந்தத் தொகுதியில் உள்ளனர். இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியிலேயே மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜே.சி.டி. பிரபாகரன் களத்தில் உள்ளார். போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
* எல்லைகள்
 திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், மதுரவாயல், மாதவரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள், கொளத்தூர் தொகுதியின் எல்லைகளாக உள்ளன.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
 கொளத்தூர், பெரியார் நகர், செம்பியம், பூம்புகார் நகர், செந்தில்நகர், சண்முகம் நகர், சீனிவாசா நகர், கொளத்தூர் மக்காராம் தோட்டம், ராஜன் நகர், லட்சுமிநகர், என்.வி.எம்.நகர் ஏரிக்கரை, கொளத்தூர் சுப்பிரமணியபுரம், மகாவீர்நகர், தில்லை நகர், செல்வி நகர், தென்பழனி நகர், அம்பேத்கர் நகர், தயாளு நகர், இந்திரா நகர், ரங்கதாஸ் ரெட்டி காலனி, நேதாஜி நகர், ஜானகிராம் ரெட்டி காலனி, முருகன் நகர், ஜி.கே.எம்.காலனி, கம்பர் நகர், மாங்காளி நீதிமான் நகர், செல்லியம்மன் நகர், பெரவள்ளூர், ஜவஹர் நகர், வெற்றி நகர், பேப்பர் மில்ஸ் சாலை, அகரம் ஆகிய பகுதிகள்.
* வாக்காளர்கள்
 ஆண்கள் 1,29,587
 பெண்கள் 1,32,273
 திருநங்கைகள் 53
 மொத்தம் 2,61,913
 மொத்த வாக்குச் சாவடிகள் 221
* இதுவரை தேர்தலில் வென்றவர்கள் வில்லிவாக்கம் தொகுதியாக இருந்தபோது:
 1977 க.சுப்பு (திமுக)
 1980 ஜே.சி.டி.பிரபாகரன் (அதிமுக)
 1984 வி.பி.சித்தன் (மார்க்சிஸ்ட்)
 1989 டபிள்யூ.ஆர்.வரதராஜன் (மார்க்சிஸ்ட்)
 1991 ஜி.காளன் (காங்கிரஸ்)
 1996 ஜே.எம்.ஹாரூண் (தமாகா)
 2001 து.நெப்போலியன் (திமுக)
 2006 ப.ரங்கநாதன் (திமுக)
 கொளத்தூர் தொகுதி உருவான பிறகு:
 2011 மு.க.ஸ்டாலின் (திமுக)
* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்
 எஸ்.பி.கார்த்திகா, இணை ஆணையர், கலால் துறை, சென்னை
 செல்லிடப்பேசி:97909 77999
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com