வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வியாசர்பாடி சுரங்கப்பாதை- தீராத 50 ஆண்டு கனவு!

தென் சென்னையையும் வட சென்னையையும் இணைக்கும் வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக

News image
Updated On :1 மே 2016, 4:27 am

இன்னும் தீரல...திரு.வி.க. நகர் தொகுதி
 தென் சென்னையையும் வட சென்னையையும் இணைக்கும் வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக ஒருதடவை பயணம் செய்தால், தென் சென்னை வாழ்கிறது. வட சென்னை தேய்கிறது என்ற பிரபலமான வாசகத்துக்குப் பின்னால் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ளலாம்.
 சிறு மழை பெய்தால்கூட இந்தச் சுரங்கப்பாதை மூழ்கிவிடுகிறது. பெரு மழை தேவையில்லை. சிறு மழையே இந்தச் சுரங்கப் பாதையை மூழ்கடித்து, எங்களின் எல்லா போக்குவரத்து மார்க்கங்களையும் தடை செய்து விடுகிறது. நாங்கள் சென்னைக்குள் தனித் தீவாக தனித்து விடப்படுகிறோம் என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்கள் வட சென்னை மக்கள்.
 பெரம்பூர் மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக, வட சென்னையையும், தென் சென்னையையும் இணைக்கும் ஒரே ஒரு மார்க்கமாக இந்த வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதை மட்டும்தான் இருந்தது.
 பெரிய வாகனங்கள் செல்ல முடியாது: இந்த சுரங்கப் பாதையின் உயரம் மிகக் குறைவாக உள்ளதால், பெரிய வாகனங்களில், பேருந்துகள் மட்டுமே இதன் வழியாகச் செல்ல முடியும். கண்டெய்னர் லாரிகள் இந்த சுரங்கப் பாதை வழியாகச் செல்ல முடியாது. இதனால் நாங்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து பொன்னேரி நெடுஞ்சாலை, அம்பத்தூர் வழியாகச் செல்கிறோம். இதனால் அதிகளவு பணம் விரயமாகிறது என்கிறார்கள் கவலையுடன் லாரி உரிமையாளர்கள்.
 தென் சென்னைக்கும் தேவை இந்தப் பாலம்: வட சென்னை மக்களுக்கு மட்டுமல்ல, தென் சென்னை மக்களுக்கும் இந்த சுரங்கப் பாதை மிகவும் முக்கியமான சுரங்கப்பாதையாக உள்ளது. தென் சென்னை மக்கள் இதன் வழியாக மட்டுமே எருக்கஞ்சேரி பிரதான சாலைக்குச் செல்லலாம். எருக்கஞ்சேரியில் இருந்து சென்னையின் அனைத்து பகுதிக்கும் செல்லக் கூடிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
 பாதிக்கப்படும் தொழிலாளர்கள்: சுமார் 2 லட்சம் மக்கள் நாள்தோறும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் இந்த சுரங்கப் பாதை வழியாக பயணம் செய்கிறார்கள். சர்மா நகரிலும், கண்ணதாசன் நகரிலும் உள்ள தொழிற்பேட்டைகளுக்கு வேலைக்காக வரும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மழைக் காலத்தில், இந்த சுரங்கப்பாதை முழுமையாக மூழ்கி விடுவதால் இவர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வேலை நாள்களில் காலை 10 மணி அளவில் வந்து பாருங்கள், இந்தச் சுரங்கப் பாதையைக் கடந்து செல்லவே குறைந்தது 30 நிமிஷங்களாகும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
 கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம்: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வட சென்னையையும் தென் சென்னையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை கன்னிகாபுரத்திலிருந்து கட்டத் திட்டமிட்டு அதற்காக ரூ.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
 மேம்பாலத்திற்குத் தேவையான நிலங்கள் கூடக் கையகப்படுத்தப்பட்டன. இதன்பின் பணிகள் நடைபெறவில்லை. எங்களது கனவு இன்னும் நிறைவேறாமல் உள்ளது என்று அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
 இந்த மேம்பாலம் கட்டப்பட்டால் வட சென்னைக்கும், தென் சென்னைக்கும் இடையேயான போக்குவரத்து தடையின்றி நடைபெறும். இதனால், பொருளாதார, சமூக ரீதியில் இந்த இரண்டு பகுதிகளுக்கிடையான வேறுபாடுகள் நீங்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.