எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லையில் நாளை வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் பிரசாரம்!

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர்.

News image
Updated On :28 மார்ச் 2016, 8:13 am

ஷேக் அப்துல்காதர்

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர்.

மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் வடமாவட்டங்களில் 4 கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டணியில் தேமுதிக இணைந்த பிறகு இக்கூட்டணித் தலைவர்கள் தென்மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். சில தினங்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

இதனிடையே தேமுதிக மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் திங்கள்கிழமை நாகர்கோவிலில் பிரசாரத்தை தொடங்கினர். செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெறும் மாற்று அரசியல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,
தேமுதிக கொள்கைபரப்புச் செயலர் வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.