புதுச்சேரியில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் 2 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது.


புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் 2 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது.
புதுச்சேரியில் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி மல்லாடி கிருஷ்ணாராவ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்லாடி கிருஷ்ணாராவ் 20,081 வாக்குகளையும், திருக்கோஷ்டி பைரவசாமி 12,047 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மாலாடி கிருஷ்ணராவ் 8,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதே போல, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் 18,506 வாக்குகளும், அதிமுக ஓம்சக்திசேகர் (தற்போதைய எம்எல்ஏ) 6,365 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஜான்குமார் 12,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...