புது தில்லி: ஐந்து மாநில தேர்தல்களை அமைதியாக நடத்துவதற்கு உதவிய வாக்காளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான பொதுத் தேர்தல் அண்மையில் நிறைவடைந்தது.
இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நஜீம் ஜைதி, ஐந்து மாநில தேர்தல்கள் அனைத்தும் பொதுவாக அமைதியாக நடைபெற்றது. இதற்காக வாக்காளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக தேர்தல் களத்தில் அதிக அளவில் கருப்புப் பணம் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் வந்தன. தேர்தல் ஆணையம் கணக்கில் வராத சுமார் ரூ. 110 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தது.
நாங்கள் எங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளோம். சிலர் எங்களை விமரிசித்துள்ளனர். அது அவர்களது பார்வையிலானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்

இருந்தும் பயன்படாத கைப்பேசி பைகள்; பெயரளவுக்கு செயல்பட்ட சக்கர நாற்காலிகள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


