விழுப்புரம் அருகே அமைந்துள்ள பழைமையான மாரங்கியூர் ராமலிங்கேஸ்வரர் கோயில் திருப்பணிகள், ராஜகோபுரம் அமைக்கும் பணியுடன் வியாழக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் மாரங்கியூர் கிராமத்தில் ராமபிரான் வழிபட்ட தளமாக கருதப்பட்டு வரும் பர்வதவர்தனி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை புதுப்பித்து கட்டமைக்கும் விதமாக, ஊர் பொது மக்கள் சார்பில், திருப்பணி வேலைகளை செய்து வருகின்றனர்.
கோயில் திருப்பணியில் பிரதான பணியான ராஜகோபுரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, காலை 8 மணிக்கு கணபதி, லட்சுமி ஹோமம், நவக்கிரக பூஜைகள் நடைபெற்றன. அப்போது, கோயிலில் அமைந்துள்ள விநாயகர், முருகர், மூலவர் அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் விமான கோபுரம், திருநந்திகேஸ்வரர் சுவாமிகளுக்கு மண்டபம் அமைக்கும் பணிகளை கோவை கௌமார மடத்தின் ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பூஜைகள் செய்து தொடக்கிவைத்தார்.
பின்னர், மழை வேண்டி, கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜையும் கோவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. கோயில் திருப்பணிக்கு உதவிய விழுப்புரம் பகுதி முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை சிவாச்சாரியார் சிவானந்தம் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.