தத்துக் குழந்தை அல்ல... 'மகி' நான் பெற்றெடுத்த குழந்தை: மனம் திறக்கிறார் நடிகை ரேவதி!

குழந்தையை ரேவதியின் தத்துக் குழந்தை என்றே ஊடகங்கள் குறிப்பிட்டன. இதுவரையிலும் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காது இருந்த ரேவதி. தற்போது, தனது குழந்தை மகி தத்துக் குழந்தை அல்ல... சோதனைக் குழாய் முறையில் தான்
தத்துக் குழந்தை அல்ல... 'மகி' நான் பெற்றெடுத்த குழந்தை: மனம் திறக்கிறார் நடிகை ரேவதி!
Published on
Updated on
1 min read

நடிகை ரேவதி தமிழ்நாட்டில் பலருக்கும் பிடித்தமான நடிகைகளில் ஒருவர். இயக்குனர் பாரதி ராஜா மூலமாக மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த இயக்குனர்கள் அனைவரது இயக்கத்திலும் நடித்ததோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் நிற்க நேரமின்றி கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது ஒளிப்பதிவாளரும் விளம்பரப் பட இயக்குனருமான சுரேஷ் மேனனுடன் காதலாகி இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து புதிய முகம் என்றொரு திரைப்படத்தில் தம்பதிகளாகவும் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு 90 களின் இறுதி வரை ஓய்வில்லாது சிறு இடைவெளி கூட இல்லாது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரான ரேவதிக்கு திருமணமாகிப் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. அதைப் பற்றிய ஏக்கம் அவருக்குள் இருந்தது. வாழ்க்கையில் பல பிரச்னைகளையும், தடைகளையும் கடந்து வந்தவரான ரேவதி கணவர் சுரேஷ் மேனனுடனான விவாகரத்துக்குப் பின் தனிமை வாட்டிய போதும் ஒரு இயக்குனராகவும், டப்பிங் குரல் கலைஞராகவும், நடன இயக்குனராகவும், சமூக ஆர்வலராகவும் திருப்திப் பட்டுக் கொண்டு சுதந்திரமாக இயங்கிக் கொண்டு ஒரு பன்முகக் கலைஞராக திருப்தியடைந்து வந்தார். ஆனால்... எத்தனை திறமைகளிருந்த போதும் தாய்மை என்ற ஒரு பந்தத்தை உணராமல் போனால் பெண்மை முழுமையடையாது என்று கருதியதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ரேவதி மகி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக அப்போது ஊடகங்களில் செய்தி பரவியது. 

அந்தக் குழந்தையை ரேவதியின் தத்துக் குழந்தை என்றே ஊடகங்கள் குறிப்பிட்டன. இதுவரையிலும் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காது இருந்த ரேவதி. தற்போது, தனது குழந்தை மகி தத்துக் குழந்தை அல்ல... சோதனைக் குழாய் முறையில் தான் கருவுற்றுப் பெற்றெடுத்த மகள் என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். குழந்தை மகிக்கு தற்போது 5 வயதாகிறது. தன் வாழ்க்கையே மகி தான் என்று உருகும் ரேவதி மகியை வளர்ப்பதில் மட்டுமே தற்போது முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவில் குறைத்து விட்டு தனது குழந்தை வளர்ப்புக்கு இடைஞ்சல் நேராத வகையிலான சீரியல்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். தற்போது ரேவதியைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு அழகு, அழியாத கோலங்கள் போன்ற மெகா சீரியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com