வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

அரசு அல்லது தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கவனக்குறைவிற்கு பொறுப்பாக்க முடியுமா?

By வழக்கறிஞர் சி.பி.சரவணன்| DIN | Published: 06th August 2018 12:24 PM

 

M.Shoba Vs Dr.Rajakumari Unnithan (AIR 1999 ker 149,156,157) என்ற வழக்கின் முக்கியமான தீர்ப்பு யாதெனில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 2(1) (i) (iii)ன் படி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளி நுகர்வோர் ஆகமாட்டார் என்பதாகும்.  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப் பிரிவு   2 (1) (d)- ன் படி ஒரு நபர் சேவைக்கான கட்டணத்தை செலுத்தியிருந்தாலோ, செலுத்துவதாக உறுதியளித்தாலோ, பகுதி செலுத்தி அல்லது பகுதி செலுத்துவதாக உறுதியளித்தாலோ அல்லது தவணைகளாக செலுத்தும் முறையிலோ சேவையே துய்க்கும் நபரையோ அதன் பயனாளியையோ நுகர்வோர் என்ற வார்த்தை குறிக்கும்.
    

சேவை என்பது பிரிவு 2 (1) (0) ன் படி துய்ப்பதற்கு சாத்தியமுள்ள எவ்வாறாகினும் விவரிக்கத்தக்க கட்டணத்திற்காக பெறப்பட்ட சேவைகளையும் மற்றும் வங்கி நிதி ஆயுள் காப்பீடு, போக்குவரத்து பக்குவப்படுத்துதல், மின் தொடர்பு, தங்கும் வசதி கோரிக்கை, பொழுதுபோக்கு, செய்தி மற்றும் தகவல் அளித்தல் ஆகியவற்றை குறிக்கும். ஆனால் தனிச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டணமின்றி செய்யப்படும் சேவைகளைக் குறிக்காது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
    

எனவே அரசு மருத்துமனைகளின் கட்டணமின்றி செய்யப்படும் சேவையான மருத்துவ சேவையை “சேவை’(services) என்பதன் விளக்கம் உள்ளடக்காது... அரசு மருத்துவமனைகளில் பணம் செலுத்தும் வார்டுகள் இருந்தபோதும், அவை அறை வசதி போன்றவைகளுக்காக செலுத்தப்படும் பணமே தவிர சேவைகளுக்காக செலுத்தப்படும் பணமல்ல.  ஆனால் தற்போது மருத்துவர். Balram Prasad vs Kunal Saha & Ors (CIVIL APPEAL NO.2867 OF 2012) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம்... சட்டத்தின் இந்நிலையை மாற்றி அரசு மற்றும் டிரஸ்ட்டால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களும் கவனக்குறைவுக்கு நுகர்வோர் சட்டத்தின் கீழ் பொறுப்பாவார்கள் என தீர்ப்பளித்துள்ளது.
    

மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் மாத்திரைகள் தயரிக்க அடிப்படை உரிமைகள் இருப்பதாக கூற முடியாது.  (Organisation of Pharma ceutical producers of India Vs Union of India, AIR 1987 SC 1414).  சுகாதாரத்திற்கான ஆயுள் காப்பீடு என்பது அடிப்படை உரிமையாகும் என kir loskar brthers Ltd Vs Employees State Insurance Corporation 1996(2) SCC 682.
    

பணியாளர்களின்  ஆரோக்கியம் என்பது அவர்களின் கடின உழைப்பின் பலனை அனுபவிக்க உள்ள மனித உரிமையாகும்.  பணியில் இருக்கும் போதோ அல்லது ஓய்வு பெற்ற பின்னரோ சுகாதாரத்திற்கான ஆயுள் காப்பீடு என்பது அடிப்படை உரிமையாகும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

HIV நோயும் நன்னடத்தை கோட்பாடுகளும் : 
    

தொகுக்கப்பட்ட நன்னடத்தை கோட்பாடுகள் 2002- ன் பிரிவு 7.14 ன் படி நோயாளிகளின் இரகசியங்களைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு மருத்துவரின் கடமையாகும்.  பிரிட்டனின் ஜெனரல் மருத்துவ கவுன்சில் தன்னுடைய வழிகாட்டுதல்களில் தனிப்பட்ட இரகசியங்களை வெளியில் சொல்லக்கூடாது என்பதை மதிக்க வேண்டும். இருந்தாலும் கூட அந்த இரகசியங்களை சொல்லாவிடில் ஒரு குறிப்பிட்ட நகருக்கு இனங்காணக்கூடிய அபாயம் சொல்லாமல் விடுவதால் இருக்கிறது என்றால் அந்த இரகசியத்தை வெளியிடலாம். பாலின ரீதியான இணை ஒருவருக்கு நோயாளியின் விருப்பத்தை புறந்தள்ளிவிட்டு தகவல் தருவது  மருத்துவரின் கடமையாகும். 
    Mr. 'X' vs Hospital 'Z'  (1998)  SCC 296  என்ற வழக்கில் எதிர்கால ஆரோக்யத்திற்கு அபாயம் இருக்கும் சூழ்நிலையில் கமுக்கமாக இருக்க வேண்டியதில்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே HIV பரப்புதல்... 
    

குழந்தைக்கு தாய்ப்பால் தராமல் தவிர்ப்பதன் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு HIV பரவாமல் தடுக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமாக தெரிந்தே HIV நோயை பரப்பும் செயல் குற்ற வழக்கு தொடர்வதற்குரிய செயல் என சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

மருத்துவ துறைகளின் குறைந்தபட்ச தரநிலை...
    

மருத்துவர் ஒருவர் நேர்மையாக ஒழுக்கக் கோட்பாடுகளை கடைபிடிப்பவராக நாணயத்துடன் செயல்படுபவராக இரக்கம் உள்ளவராக பிறரின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் மகிழ்ச்சி பெறுபவராக தன்னை தொடர்ந்து விருத்தி செய்து கொள்பவராக மருத்துவ நலனில் பணிபுரிபவர்களோடு குழு உறுப்பினராய் இருந்து பணிபுரிபவராக எதிர்ப்பார்க்கப்படுகிறார்.  நம்பிக்கையை  பெறுவதே மருத்துவத் தொழிலின் தலையாய கடமையாகும்.  ஒன்றை செய்ய இயலும் என்ற நிலையிலிருந்து அதை எவ்வளவு சிறப்பாக செய்ய இயலுமோ அவ்வளவு சிறப்பாக செயல்படுவதையே மருத்துவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே,  மருத்துவர்கள் உன்னதத்தை நோக்கி பணியாற்ற வேண்டும்.
    

அவ்வாறு உன்னதத்தை நோக்கி செயல்படாவிடினும் ஒரு துறையில் சாதாரண அறிவு பெற்றவர்கள் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில் பயிற்சி செய்வதில் தன் அறிவை பயன்படுத்தி பணிபுரிவதிலும் குறைவாக செயல்பட்டு அதனால் நோயாளிக்கு ஊறு விளைவிக்க நேருமாயின் அது கவனக்குறைவு என்றும் அக்கவனக்குறைவு அதிகபட்சமானதாக இருந்து சமுதாயத்திற்கு அல்லது அரசுக் கெதிரான குற்றம் என்று சொல்லப்படும் விதத்தில் இருந்தால் அது குற்றவியல் கவனக்குறைவு எனவும் அழைக்கப்படுகிறது.  அவ்வாறு ஒரு துறையில் சாதாரண அறிவு பெற்றவர்களின் சாதாரண செயல்பாட்டு நிலையை அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் பயிற்சியை அளவீடு செய்ய ஒரு அளவுகோள் அவசியம்.  அவை குறித்து காண்போம்.

மயக்கவியல் துறை மருத்துவர்...  
    

மயக்கவியல் மருத்துவர் நோயாளியின் அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருடன் கலந்து பேசி மயக்க மருந்து கொடுக்கும் போது ஏற்படும் விளைவுகளை முன் கூட்டியே நோயாளிக்கு தெரியப்படுத்த வேண்டும்.  மயக்க மருந்து கொடுப்பதால் தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதையும் நோயாளிக்கு அறிவிக்க வேண்டும். அறுவை சிகிச்சையின் போது நோயாளியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தன்னுடைய பணியை தகுதி இல்லாத பிறருக்கு ஒப்படைப்பதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் சாதனங்களை கேஸ் சிலிண்டரை பரிசோதிப்பது உட்பட மயக்கவியல் மருத்துவரின் பணியாகும். குறையுடைய சாதனங்களை கண்டுபிடிக்கா விட்டாலும் மயக்க மருந்து அளிக்கப்படும் காலத்தில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடாவிட்டாலும் மயக்க மருந்து அளிக்கப்பட்ட பதிவேடுகளை பராமரிக்க தவறினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில் முறை பயிற்சியை நடைமுறைப்படுத்தத் தவறினாலும் மயக்க மருந்து அளிக்கப்பட்ட காலத்தில் நோயாளி தொடர்ந்து சுயநினைவுடன் இருந்து அதனால் அதிர்ச்சிக்குள்ளானாலும் மயக்க மருந்து மருத்துவர் கவனக்குறைவாக செயல்பட்டதாகவே சொல்லப்படுவார்.  அறுவை சிகிச்சையின் போது இடையில் மயக்கம் தெளிந்தால் மயக்கவியல் மருத்துவர் பொறுப்பாக மாட்டார்.

இதய நோய் மருத்துவர்... 
    

நோயாளிக்கு செய்யப்படும் இதய சிகிச்சை வலி நீக்குவது அல்லது குணமாக்குவது என இரு வகைப்படும்.  அச்சிகிச்சைக்குப் பின்பு நோயாளி தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இதயத்தை திறந்தும் மூடிய நிலையிலும் இச்செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. திறந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது இதய – நுரையீரல்  இயந்திரத்தின் மூலம் இதயத்தின் பணி மேற்கொள்ளச் செய்யப்படும்.  மூளை சேதம் ஏற்படுதல் இதயத்தை திறந்து அறுவை  சிகிச்சை செய்யும் போது இதயத்தின் பணியை இயந்திரம் செய்யும் போது மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
    

உள்ளுறுப்புகளுக்கு இரத்தம் குறைவாக செல்லும் சூழ்நிலையில் நோயாளிக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளக் கூடாது.  நோய் தொற்று நீக்கும் கரைசல் மூலமாக அறுவைசிகிச்சை செய்யப்படும் பகுதியைச் சுற்றிலுமுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.  நோய் தொற்றுத் தடை மருந்துகள் சிகிச்சையின் போது கொடுக்க வேண்டும்.  அவ்வாறு கொடுக்கத் தவறுவது கவனக்குறைவாகும்.
    

அறுவை சிகிச்சைக்கு முன்னதாக ஒருவரின் இரத்த அழுத்தம் 150 mm என இருக்கும் போது நோயாளி அதிக பதற்றத்துடன் காணப்படுவதை ஏற்காமல் அவரை அறுவை சிகிச்சைக்கு ஏற்ற நபராக இருக்கிறாரா என்றும் தக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தாமல் இருந்த செயல் கவனக்குறைவானது ஆகும்.  என Arunaben D. Kothari & Others Vs Navdeep Clinic & Others (1996(3) CPR 20 CRJ என்ற வழக்கில்  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பல் சிகிச்சை...
    

பல் பிடுங்கும் போது சுவையறியும் நரம்புகளுக்கு உதடு, நாக்கு, கன்னம் ஆகிய உறுப்புகளுக்கும் ஏற்படக்கூடிய ஊறுகளை நோயாளிக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.  பல்லின் பாகம் பல் பிடுங்கும் போது அதன் பகுதி நின்றுவிடுதல் தாடைக்கு சேதம் ஏற்படுதல் போன்றவற்றை முன் கூட்டியே நோயாளிக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது கவனக் குறைவான செயலாகும். பல் பிடுங்கும் போது வேரின் மீதம் தாடைக்குள்ளே இருப்பதை சொல்லி அது அங்கு இருப்பதன் விளைவுகளை நோயாளிக்கு எடுத்துச் சொல்லி அதை அகற்ற வேண்டும்.  புதிதாக பல்லின் மேல் முனை அல்லது பல்களுக்கிடையே உள்ள இடைவெளியை சரி செய்யும் இணைப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் போது அவற்றின் வண்ணங்களையும் இயற்கை பல் போல் அவற்றை உபயோகப்படுத்த முடியாது என்பதைனையும் நோயாளிக்கு எடுத்துரைக்க வேண்டும்.  வலி இல்லாத தவறான பற்களை பிடுங்குதல், சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பு நோய் தொற்றுத் தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல் போன்ற சிகிச்சையை செய்யாமல் இருப்பதும் கவனக்குறைவான செயலே ஆகும்.  வாயிலுள்ள புண்கள் வீக்கம் போனறவற்றிற்கு தக்க சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். பல்பிடுங்கும் போது நாக்கின் பற்பகுதியில் அடைந்துள்ள நரம்பு பாதிக்கப்பட்டதற்கு மருத்துவரின் கவனக்குறைவு காரணம் என Health Vs West Bershire health Authority (1992) 3 Med LR 57  வழக்கில் QUEEN'S BENCH DIVISION தீர்ப்புரைத்துள்ளது.

Tags : Medical negligence and doctors' liability) அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் கவனக்குறைவு சட்டமணி sattamani

More from the section

அரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா?
அமைச்சரவைச் செயலகம் என்றால் என்ன?
கணிணி கண்காணிப்பு தனிமனிதனை பாதிக்குமா?
“வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2016” இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
உளவுத் துறை பற்றி ஓர் அறிமுகம்...