அரசியல் வரலாறு 'பாகம்-2'

அரசியல் வரலாறு 'பாகம்-2'

1940 ஆம் ஆண்டுகளில் அரசியல்

வில்சன் முன்மொழிந்த, அரசியல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் இந்தப் பிரிவானது இன்று பொது நிர்வாகத்தில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த இரட்டைப் பண்பின் ஆதிக்கம் 1940-களில் தொடங்கி, இரண்டாம் தலைமுறை அறிஞர்களால் கேள்விக்குள்ளானது. லூத்தர் கல்லிக்கின் (Luther Gulick) உண்மை-மதிப்பு இரட்டைப் பண்பே நடைமுறை சாத்தியமற்றது எனக் கருதப்பட்ட வில்சனின் அரசியல்-நிர்வாக இரட்டைப் பண்புக்கு முக்கியமான போட்டியாக இருந்தது. வில்சனின் முதல் தலைமுறைப் பிரிவின் போது, கல்லிக் "சுதந்திரத்தன்மை மற்றும் இடைசெயல் தன்மை ஆகியவற்றின் ஒரு சீரான வலையமைப்பை" முன்மொழிந்தார் (ஃப்ரை 1989, 80).

லூத்தர் கல்லிக் மற்றும் லிண்டால் அர்விக் (Lyndall Urwick) ஆகியோர் இப்படிப்பட்ட இரண்டாம் தலைமுறை அறிஞர்களாவர். கல்லிக், அர்விக் மற்றும் புதிய தலைமுறை நிர்வாகிகள் பலர், ஹென்றி ஃபோயல் (Henri Fayol), ஃப்ரெடரிக் வின்ஸ்லோ டெய்லர் (Fredrick Winslow Taylor), பால் ஆப்பிள்பை (Paul Appleby), ஃப்ரேங்க் குட்னவ் (Frank Goodnow) மற்றும் வில்லியம் வில்லோபை (Willam Willoughby) உள்ளிட்ட சமகாலத்திய நடத்தை, நிர்வாகவியல் மற்றும் நிறுவனவியல் "ஜாம்பவான்களைச்" சார்ந்திருந்தனர்.

இந்தத் துறை வல்லுநர்கள் மற்றும் அவர்களின் மனித இயல்பு, குழு நடத்தை மற்றும் வணிக நிறுவனங்கள் தொடர்பான சோதனை ரீதியலான பணிகளின் உதவி கிடைத்தது இரண்டாம் தலைமுறை பொது நிர்வாக அறிஞர்கள் அந்தத் தலைமுறைக்கு முந்தைய மற்றும் முதல் தலைமுறை அறிஞர்களுக்குக் கிடைக்காத அனுகூலங்கள் கிடைத்தன. அதற்குப் பிறகு புதிய தலைமுறையைச் சார்ந்த நிறுவன ரீதியான கோட்பாடுகள் பழங்கால மற்றும் முதிர்ச்சி பெற்ற கோட்பாட்டாளர்களின் கருத்துகளைப் போல மனித இயல்பு தர்க்க ரீதியான கருதுகோள்கள் மற்றும் பொதுமைப்படுத்தல்களைச் சார்ந்திருக்கவில்லை எனலாம்.

கல்லிக் அவர்கள் களஞ்சிய அறிஞராகக் கருதப்படுகிறார். அவர் உண்மையில் ஒரு தனித்துவம் வாய்ந்த நிர்வாக அறிஞராவார், விவரமான பொது நிறுவனவியல் கோட்பாட்டை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். அவரது எழுபதாண்டு தொழில் வாழ்க்கையில் கல்லிக் அறிவியல் முறை, செயல்திறன், தொழில்முறை ரீதியாக இருக்கும் தன்மை கட்டமைப்பியல் சீரமைப்பு மற்றும் செயல் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் அவரது கோட்பாடுகளை அவருக்கு முன்பிருந்தவர்களது கோட்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டினார்.

கல்லிக் நிர்வாகிகளின் கடமைகளை POSDCORB என்ற சுருக்க எழுத்துகளால் குறிப்பிட்டார். இவை திட்டமிடல் (planning), ஒழுங்கமைத்தல் (organizing), பணியமர்த்தல் (staffing), இயக்குதல் (directing), ஒருங்கிணைந்து செயல்படுத்துதல் (coordinating), அறிக்கையிடுதல் (reporting) மற்றும் பணத்திட்டமிடல் (budgeting) ஆகியவற்றைக் குறிக்கின்றன.

இறுதியில், ஃபாயல் தனியார் மேலாண்மைக்கான ஒரு முறையியல் ரீதியான 14-புள்ளி முறையை வழங்கினார். இரண்டாம் தலைமுறை கோட்பாட்டாளர்கள் நிர்வாக அறிவியல்களுக்கு தனியார் மேலாண்மை நடைமுறைப் பழக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். தனியார் மற்றும் பொதுத் துறை ஆகியவற்றின் இடையே உள்ள எல்லைகளைக் கடந்து செல்லக்கூடிய ஒர் ஒற்றை, பொதுமையான, மேலாண்மைக் கோட்பாடு ஒன்று இருப்பதும் சாத்தியம் என்றே கருதப்பட்டது. பொதுக் கோட்பாட்டின் படி, நிர்வாகக் கோட்பாடானது அரசாங்க நிறுவனங்களின் மீதே கவனம் செலுத்தும்படி இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம்

1940-களின் இடைப்பகுதிக் காலத்தைச் சேர்ந்த கோட்பாட்டாளர்கள் வில்சன் மற்றும் கல்லிக் ஆகியோரின் கருத்துகளுக்கு சவால் விட்டனர். அரசியல்-நிர்வாக இரட்டைத் தன்மையே மூன்றாம் தலைமுறையினரின் விமர்சனங்களின் மையமாக விளங்கியது. இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தது மட்டுமின்றி அரசாங்கமும் அதன் செயல்திறனற்ற, போதுமானதல்லாத முயற்சிகள் வீணடிக்கப்பட்டதால் ஆபத்துக்குள்ளானது.

சில நேரங்களில் நம்பிக்கை துரோகமானதும் அதிக செலவு கொண்டதுமான அமெரிக்காவின் வியட்னாம் ஊடுருவல் மற்றும் வாட்டர்கேட் (Watergate) உள்ளிட்ட உள்நாட்டு சர்ச்சைகள் ஆகியவற்றை மூன்றாம் தலைமுறையின் சுய அழிவுக்குள்ளான அரசாங்க நடத்தைகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். செயல்திறனற்ற வீணான அதிகார நிர்வாகத்திற்குப் பதிலாக செயல்திறனுள்ள நிர்வாகம் வேண்டும் என குடிமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு பதிலளிப்பதற்காகவும் தொடர்ந்து செயல்திறனுடையதாக இருப்பதற்காகவும் பொது நிர்வாகமானது அரசியலிலிருந்து தொலைவில் இருக்க வேண்டியது அவசியமானது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் இத்தகைய சீரமைப்பை ஆதரித்தனர். அரசாங்கத்தின் மறு ஒழுங்கமைப்பை ஆய்வு செய்வதற்காக யுனிவர்ஸிட்டி ஆஃப் சிக்காகோ (University of Chicago) பேராசிரியரான லூயிஸ் ப்ரௌன்லோவின் (Louis Brownlow) தலைமையில் ஹூவர் ஆணையம் (Hoover Commission) என்ற ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் விளைவாக டாக்டர். ப்ரௌன்லோ பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகச் சேவை அமைப்பை நிறுவினார்.

1980 ஆம் ஆண்டுகளில்

1980-களின் பிற்பகுதியில், பொது நிர்வாக கோட்பாட்டாளர்களின் மற்றும் ஒரு தலைமுறை அதற்கு முன்பிருந்த தலைமுறைக்கு பதிலாக இடம்பெறத் தொடங்கியது. அது பொது நிர்வாக மேலாண்மை என அழைக்கப்பட்டது, அதை டேவிட் ஆஸ்போன் (David Osborne) மற்றும் டெட் கேப்ளர் (Ted Gaebler) ஆகியோர் முன்மொழிந்தனர்.

இந்தப் புதிய மாதிரியானது பொதுத் துறையை மேம்படுத்துவதற்கு, தனியார் துறைக் கண்டுபிடிப்புகள், வளங்கள் மற்றும் நிறுவன ரீதியான சிந்தனைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஆதரித்தது. கிளிண்டனின் நிர்வாகத்தின் போது (1992-2000), துணை அதிபர் அல் காரே (Al Gore) ஃபெடரல் ஏஜென்சிகளைப் பின்பற்றி அதன் படி சீரமைத்தார். புதிய பொது மேலாண்மையானது அமெரிக்காவின் ஆட்சியமைப்பு முழுவதிலும் பெரும்பாலும் பின்பற்றப்படும் அம்சமாக மாறியது.

சில விமர்சகர்கள், "குடிமக்கள்" என்பதற்கு பதிலாக "வாடிக்கையாளர்கள்" என்ற கருத்தைப் பயன்படுத்தும் அமெரிக்கர்களின் இந்தப் புதிய பொது மேலாண்மைக் கருத்தானது ஏற்றுக்கொள்ளத்தகாத முறைகேட்டுப் பயன்பாடாகும் என விவாதிக்கின்றனர்.

அதாவது, வாடிக்கையாளர்கள் என்போர் கொள்கை உருவாக்க செயல்முறைகளில் எல்லாம் பங்கேற்காமல் ஆதாயம் என்னும் ஒரு முடிவுடன் மட்டுமே தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர். குடிமக்கள் என்போர் ஒரு வணிகத்தின் நுகர்வோர்களல்லர் (வாடிக்கையாளர்கள்), உண்மையில் அவர்கள் அரசாங்கத்தின் சொந்தக்காரர்களாவர் (உரிமையாளர்கள்). புதிய பொது மேலாண்மையில், மக்கள் ஜனநாயக அம்சமாகக் கருதப்படாமல் பொருளாதார அம்சமாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், இந்த மாதிரியானது அரசங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டுகளில்

1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஜேனட் (Janet) மற்றும் ராபர்ட் டென்ஹார்ட் (Robert Denhardt) ஆகியோர் ஒரு புதிய பொதுப் பணிச் சேவை மாதிரியை முன்மொழிந்தனர். அமெரிக்கர்களை "வாடிக்கையாளர்களாகப்" பார்க்காமல் "குடிமக்களாகப்" பார்த்ததே இந்த மாதிரியின் முதன்மைப் பங்களிப்பாகும். இதன்படி, குடிமகன்(ள்) என்பவர் அரசாங்கத்தில் பங்கேற்று கொள்கை செயலாக்கம் முழுவதிலும் செயல்மிகு பங்களிப்பை வழங்குபவராக இருக்க எதிர்பார்க்கப்படுகிறார். அதன்படி இந்த உரிமையாளர்கள் ஒரு முடிவாகக் கருதப்படுவதில்லை. இது குடிமை உரிமை என்பது பொதுவாக ஒன்றுபோல் இருக்கின்ற ஃபெடரல், மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்க நிலைகளுக்கு ஏற்றதாக இருக்கும்பட்சத்தில், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 'நாடுகளுக்கிடையேயான செயல் வலையமைப்புகள்' ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 'நாடுகளுக்கிடையேயான நிர்வாகத்தின்' வளர்ச்சியானது குடிமக்களின் பங்களிப்பின் அம்சங்களை சிக்கலானதாக்குகிறது.

openforum.com.au என்பது இதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும், இது ஓர் ஆஸ்திரேலிய இலாப நோக்கற்ற மின் - ஜனநாயக பணித்திட்டமாகும், அது அரசியல்வாதிகள், மூத்த பொதுப் பணியாளர்கள், அறிஞர்கள், வணிக நபர்கள் மற்றும் பிற முக்கிய நடுநிலை முதலீட்டாளர்கள் ஆகியோரை உயர்நிலைக் கொள்கை விவாதங்களில் பங்கேற்க அழைக்கிறது.

புதிய பொது மேலாண்மை

டிஜிட்டல் சகாப்த ஆட்சியே NPM க்கு அடுத்த நிலையில் பின் தொடர்வதாகும் என விமர்சகர்கள் கூறுகின்றனர், அது அரசாங்கப் பொறுப்புகள், தேவைகளை அடிப்படையாகக் கொண்ட முழுமைத்தன்மை மற்றும் டிஜிட்டலாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com