குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

இன்றைய ராசி பலன்கள் (27.8.2026) 12 ராசிகளுக்கும்! மகர ராசிக்கு அனுகூலம்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

ஜோதிடம்

astro - file photo

Published On :20 வினாடிகள் முன்பு

12 ராசிக்கான ராசிப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

ஆகஸ்ட் 27, 2026 (வியாழக் கிழமை) 

மேஷம்:

இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்:

இன்று எந்தப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் குற்றங்குறைகளை நீங்கள் கண்டுபிடித்துக் கூறுவதாலும் உடனிருப்பவர்களிடம் வீண் பிரச்சினைகளும் வாக்குவாதங்களும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்:

இன்று எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய நேரிடும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:

இன்று பணவரவுகளில் பற்றாக்குறை நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனசஞ்சலங்கள் உண்டாகும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்:

இன்று உற்றார்-உறவினர்களின் ஆதரவுகளைப் பெறமுடியாமல் போகும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலையும், பணிபுரியும் பெண்களுக்கு உடனிருப்பவர்களால் வீண்பிரச்சினைகள் ஏற்பட்டு வேலைப்பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி:

இன்று புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

துலாம்:

இன்று புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கலைஞர்கள் வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தனவரவில் தடைகள் உண்டாகி கடும்சோதனைகள் ஏற்படும். சம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்:

இன்று வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:

இன்று எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன்களைப் பெறமுடியாது. தேவையற்ற பொழுதுபோக்குகளும் நண்பர்களின் சேர்க்கைகளும் வீண் பிரச்சினைகளை உண்டாக்கிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்:

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மனதில் அமைதியும், உற்சாகமும் பிறக்கும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமாக அமைவார்கள். தடைப் பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் தற்போது கைகூடும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கும்பம்:

பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தாராள மான தனவரவுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்:

அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தி யோக நிலையில் ஓரளவுக்கே உயர்வினை எதிர்பார்க்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் பணியில் திருப்திகரமான சூழ் நிலையை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3,

Summary

Today Rasi Palan in Tamil - 26 August 2026 | இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26 2026 | Today Horoscope in Tamil

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.