FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

இன்றைய ராசி பலன்கள் (31.8.2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு எப்படி?

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

ஜோதிடம்

astro - file photo

Published On :31 ஆகஸ்ட் 2026, 6:49 am IST

12 ராசிக்கான ராசிப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

ஆகஸ்ட் 31, 2026 (திங்கள் கிழமை) 

மேஷம்:

இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

ரிஷபம்:

இன்று புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் அமையும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்:

இன்று குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கடகம்:

இன்று பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்தகால கடன்கள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்:

இன்று உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய நேரம். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:

இன்று முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்:

இன்று சில புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் பணியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

விருச்சிகம்:

இன்று தொழிலில் இருந்துவந்த மந்தநிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்கசமயத்தில் அமையும். அரசுவழியில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

தனுசு:

இன்று மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபுகும் யோகமும் வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்:

இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழிலிலும் நல்ல லாபம் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கும்பம்:

இன்று கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்:

இன்று உங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். பூர்வீக சொத்துகளாலும் சாதகமான பலனைப் பெறமுடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Summary

Today Rasi Palan in Tamil - 31 August 2026 | இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31 2026 | Today Horoscope in Tamil

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.