/

மே மாதப் பலன்கள் - மிதுனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

News image

மாதப் பலன்கள்

Updated On :1 மே 2026, 10:06 am

கிரகநிலை:

ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சனி - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

09.05.2026 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

10.05.2026 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.05.2026 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.05.2026 அன்று சுக்கிரன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

26.05.2026 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26.05.2026 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும்.

உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக நீங்கள் அலையும் அலைச்சல் வெற்றி தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

அரசாங்க அனுகூலம் கிடைக்கும். பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

ம்ருகசீரிஷம்:

இந்த மாதம் ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந் தாலும் அதன் மூலம் நன்மை உண்டா கும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும்.

திருவாதிரை:

இந்த மாதம் திறமை வெளிப்படும். எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம்:

இந்த மாதம் அக்கம்பக்கத்தினரிடம் சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

பரிகாரம்: பெருமாளுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

சந்திராஷ்டம தினங்கள்: மே 08, 09, 10

அதிர்ஷ்ட தினங்கள்: மே 24, 25