அதிகார உத்தியோகம்
என் மகன் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் அரசுப்பணி கிடைக்கும் என சில ஜோதிடர்கள் கூறினர். அவனுக்கு 40 வயது ஆகப்போகின்றது. இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்குமா? தனியார் துறையிலும் முன்னேற்றமில்லை. அவர் ஜாதகத்தில் 9 இல் சனி இருப்பதால் எனக்கு ஆபத்து என்கிறார்கள். இது உண்மையா?
- ஏகநாதன், பெருந்துறை
அரசுக்கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனி ஆகிய நான்கு கிரகங்களும் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் தன பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் தசை நடப்பதாலும் வங்கி, காப்பீடு, கூட்டுறவுத்துறை போன்ற துறைகளில் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் அமையும். தொழில் ஸ்தானத்தில் சூரியபகவான் இருப்பது, அதிகாரம் செய்யும் வகையில் உத்தியோகம் அமையும் என்பதைக் குறிக்கும் அம்சமாகும். அவருக்கு குருமங்கள யோகம், குருசந்திர யோகம், சந்திர மங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் (தந்தையின் நிலையை குறிக்கும் வீடு) சனிபகவான் சுயசாரத்தில் (பூசம் நட்சத்திரம்) இருப்பதால் உங்களுக்கு உயர்வே உண்டாகும். பேராபத்து என்று எதுவும் ஏற்படாது. உங்களுக்கும் தற்சமயம் நட்பு ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு சிறப்புகள் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.