என் பேரனின் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படுகிறது. திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், சின்னமனூர்

உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகத்தைத் கொடுக்கிறார்.
Updated on
1 min read

உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகத்தைத் கொடுக்கிறார். அவருடன் விபரீத ராஜயோகம் பெற்றுள்ள சுக்கிரபகவானும் இணைந்திருக்கிறார். இவர்களை குடும்ப ஸ்தானத்திலிருந்து சனிபகவான் பார்வை செய்கிறார். தர்மகர்மாதிபதிகளான சூரிய, புதபகவான்கள் களத்திர நட்பு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். புதபகவான் களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பது பஞ்சமகா புருஷயோகங்களில் ஒன்றான பத்ர யோகத்தைக் கொடுப்பது சிறப்பாகும். தற்சமயம், பாக்கியாதிபதியான சூரியபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் உறவில் அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com