எனக்கு தற்சமயம் நிரந்தர தொழிலும் வருமானமும் இல்லை. எப்பொழுது நிலைமை மாறும்? சொந்த வீடு வாங்கும் அமைப்பு உள்ளதா? - வாசகர், நாமக்கல்
By DIN | Published On : 26th April 2019 02:35 PM | Last Updated : 26th April 2019 02:35 PM | அ+அ அ- |

உங்களுக்கு மேஷ லக்னம், கடக ராசி. லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அவருடன் புதபகவானின் இணைவு புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறது. பாக்கியாதிபதி குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஆறு, எட்டு மற்றும் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தொழில் ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானத்தில் மூல திரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார். சுகாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். ராகுபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் சிறப்பு. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் பிரச்னைகள் அனைத்தும் படிப்படியாக த் தீர்ந்துவிடும். வருமானமும் வரத் தொடங்கி பொருளாதாரம் மேம்பாடடையும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் செய்தொழில் நிலை பெற்று விடும். உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு சொந்த வீடு அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.