என் மகன் நீட் தேர்வு எழுத உள்ளார். மருத்துவராகும் வாய்ப்பு உள்ளதா? - வாசகி, தர்மபுரி
By DIN | Published On : 26th April 2019 02:36 PM | Last Updated : 26th April 2019 02:36 PM | அ+அ அ- |

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மீன ராசி. லக்னாதிபதி மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான சுக்கிர பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அர்ந்திருக்கிறார். இதனால் மகாவிஷ்ணு - மகாலட்சுமி யோகம் உண்டாகிறது. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவானும் பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்ற சூரியபகவானுடன் இணைந்து நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். இவர்களோடு எட்டு மற்றும் பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான குருபகவானும் இணைந்திருக்கிறார். மூன்று திரிகோணாதிபதிகளும் பலமாக இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் கேது மகா தசை முடியும் தருவாயில் உள்ளதாலும் மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேரலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.