எனது பேத்தியின் திருமணத்தை நான் பார்க்க விரும்புகிறேன். திருமணம் எப்போது கைகூடும்? - வாசகி, நுங்கம்பாக்கம்
By DIN | Published On : 09th June 2019 11:06 AM | Last Updated : 09th June 2019 11:06 AM | அ+அ அ- |

உங்கள் பேத்திக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் ஆறாமதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சுகாதிபதி குடும்ப ஸ்தானத்தில் பலத்துடன் அமர்ந்திருக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியும் நீச்சபங்க ராஜயோகம் பெற்று உச்சம் பெற்றுள்ள குருபகவான் மற்றும் புதபகவான்களுடன் இணைந்திருக்கிறார். குருபகவான் களத்திர, பாக்கிய மற்றும் லாப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனிபகவானின் தசை நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.