விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கஜகேசரி யோகம் 

என் மகனுக்கு 46 வயதாகிறது. பிரபல ஐடி கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளார். பதவி உயர்வும், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பும் கைக்கெட்டவில்லை.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


என் மகனுக்கு 46 வயதாகிறது. பிரபல ஐடி கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளார். பதவி உயர்வும், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பும் கைக்கெட்டவில்லை. எங்களுடைய பிற்காலம் அவர் வசதியாக வாழ்வாரா? ஆயுள் பற்றி கூறவும். 

-வாசகர், சென்னை 90. 

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான புத பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று சூரிய, சுக்கிர, செவ்வாய், ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவானும் ஆறாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்றமர்ந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி பகவானையும், ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (கஜகேசரி யோகம்) ஒன்பதாம் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தற்சமயம் குரு பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடக்கிறது. 

இன்னும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிறப்பான பதவி உயர்வும், வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். அவருக்கு பாக்கியாதிபதி லக்ன சுபர்களுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் தீர்க்காயுள் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.