உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அயன ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் செவ்வாய்பகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. கோசாரத்தில் சனிபகவான் அனுகூலமாக சஞ்சரிப்பதால் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக முடித்து விடுவார். எதிர்காலம் உயர்வாக இருக்கும். தாய்க்கும் ஆதரவாக இருப்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.