என் மகன் 9 வருடங்களாக கப்பலில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டாக பணிக்குச் செல்லாமல் ஹார்ட்வேர் வியாபாரம் தொடங்கி உள்ளார். அது பெரிதும் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. மீண்டும் கப்பல் பணிக்குச் செல்லும் வாய்ப்புள்ளதா? என் மருமகள் எம்.டெக்., ஐ.டி., படித்துள்ளார். அவருக்கு அரசு அதிகாரி அல்லது வேறு நல்ல உத்தியோகம் கிடைக்குமா?  -வாசகர், முகப்பேர்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாமதிபதி சுக்கிரபகவான் ஆறாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்கிறார்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாமதிபதி சுக்கிரபகவான் ஆறாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். சுக ஸ்தானாதிபதி சூரியபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தொழில் ஸ்தானத்திலுள்ள குருபகவானின் பார்வையை பெறுகிறார்கள். பூர்வபுண்ணியாதிபதியும் தர்மகர்மாதிபதியும் களத்திர நட்பு ஸ்தானத்திலும், களத்திர, நட்பு மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
 உங்கள் மருமகளுக்கு மிதுன லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னம், சுகாதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். மறைந்த புதன் நிறைந்த மதி என்பது ஜோதிட வழக்கு. பூர்வபுண்ணியாதிபதி, லாபாதிபதி ஆகியோர் குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள களத்திர, நட்பு, தொழில் ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்திருக்கிறார்கள். கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்களும் உண்டாகின்றன.
 உங்கள் மகனுக்கு தற்சமயம் சந்திர தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. உங்கள் மருமகளுக்கு ராகு மகா தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டே மறுபடியும் வேலைக்குச் சென்று வருவார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு உங்கள் மகனுக்கு மறுபடியும் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மற்றபடி அவர்கள் குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும். தினமும் அபிராமி அந்தாதி படித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com