வேலை இழந்து நிற்கும் எனக்கு மீண்டும் வேலை எப்பொழுது கிடைக்கும்? நன்கு படித்துள்ள என் மகளுக்கும் வேலை கிடைக்காததால் என் மனைவியின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அது எப்பொழுது சரியாகும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்..?
-வாசகர், குரோம்பேட்டை.
உங்களுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னம், எட்டாமதிபதி சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை அடைகிறார். சுக பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி சனி பகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்து பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசமஹா
யோகத்தைக் கொடுக்கிறார்.
ஒன்பதாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ஆறாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று, லாபாதிபதியான சூரிய (புத ஆதித்ய யோகம்) பகவானுடனும், குரு பகவானுடனும் இணைவதால் சிவராஜ யோகம் உண்டாகிறது.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றும், நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் அமர்ந்திருக்கிறார். ஆட்சி பெற்றுள்ள சனி பகவானுடன், கேது பகவான் இணைந்திருப்பதால் அஷ்ட மஹா நாகயோக
முண்டாகிறது.
பத்தாம் வீட்டில் செவ்வாய் பகவானுடன் ராகு பகவானும் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் லாபாதிபதியான சூரிய பகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் உங்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு உங்கள் மனைவியின் மனநிலை சீரடைந்து விடும். உங்கள் மகளுக்கும் நல்ல வேலை கிடைக்கும். தனியார் துறையில் சிறப்பாக முன்னேற்றமடைவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.