கால சர்ப்ப தோஷம் / யோகம்

கால சர்ப்ப தோஷம் / யோகம்
Updated on
1 min read


பொதுவாக அனைத்து கிரகங்களும் (லக்னம் உள்பட) ராகு / கேது பகவான்களுக்கிடையோ அல்லது கேது / ராகு பகவான்களுக்கிடையோ அமர்ந்திருந்தால்தான் கால சர்ப்ப தோஷமோ அல்லது காலசர்ப்ப யோகமோ உண்டாகும். 

இதில் ஒரு கிரகம் சர்ப்பக் கிரகங்களிடமிருந்து ஒரு பாகையாவது விலகிவிட்டால் காலசர்ப்ப தோஷமோ அல்லது யோகமோ உண்டாகாது.
லக்னத்திற்கு ராகு, கேது பகவான்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து சர்ப்ப தோஷம் உள்ளதா என்று பார்த்து பலன் கூற வேண்டும். இந்த யோகம் 32 வயதுக்குப் பிறகு சுபமாக வேலை செய்யத் தொடங்கும். 
அனுலோம கால சர்ப்ப யோகம்: முன்னால் ராகுபகவான், பின்னால் கேதுபகவான் செல்கின்றனர். கிரகங்கள் ராகு பகவானின் வாயை நோக்கி நகர்கின்றன. கேது பகவான் தன் வாலைக் கிரகங்கள் பக்கம் நீட்டிக் கொண்டு செல்கிறது. 
ராகு பகவானின் வாயில் விஷமில்லை. கேது பகவானுக்கு வாலில் விஷமில்லை. இதனால் அதிக பாதிப்பு இல்லை. இதுதான் கால சர்ப்ப யோகமாகும். 
விலோம காலசர்ப்ப யோகம்: முன்னால் கேது பகவான், பின்னால் ராகு பகவான் உள்ளிட்ட கிரகங்கள் கேது பகவானின் வாயை நோக்கிப் பயணப்படுகின்றன. கேதுவின் வாயிலிருந்து வெளிப்படும் விஷத்தால் தாக்கப்படுகின்றன. 
பின்பக்கம் ராகுபகவான் தனது வாலை கிரகங்களின் பக்கம் நீட்டிக்கொண்டே விலகிச் செல்வதால் அதிலிருந்து வெளிப்படும் விஷத்தாலும் தாக்கப்படுகின்றன.  இதுதான் காலசர்ப்ப தோஷமாகும். இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். சிலருக்கு இந்தக் கட்டுக்குள் அடைபட்டுள்ள கிரகம் ஒன்று, இந்தக் கட்டை உடைத்துக் கொண்டு மிகப்பெரிய அளவில் / நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகள் ஏற்படுவதையும் பார்க்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com