எங்களின் ஒரே மகளுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. ஜாதகம் அனுப்பி உள்ளேன். அவருக்கு புத்திர பாக்கியம் உண்டா?
-வாசகர், குன்றத்தூர்.
உங்கள் மகளுக்கு மகர லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். புத்திர ஸ்தானாதிபதி மற்றும் தர்ம கர்மாதிபதி சுக்கிர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானின் சாரத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியான புத பகவான் மற்றும் சூரிய பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.
மூன்று, பன்னிரண்டாம் வீட்டுக்கு அதிபதியான குரு பகவான், சுக லாபாதிபதியான செவ்வாய் பகவான் ஆகியோர் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து குரு மங்கள யோகத்தைக் கொடுக்கிறார்கள்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பத்தாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை இரண்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்), பகவான், புத, சுக்கிர (தர்ம கர்மாதிபதிகள்) பகவான்கள் மீதும் படிகிறது.
புத்திர ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் நவாம்சத்தில் உச்சத்தில் இருக்கிறார். இதனால் புத்திர ஸ்தானாதிபதியும், புத்திர காரகரும் சுப பலத்துடன் இருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்கையையும், வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.மற்றபடி நீங்கள் செய்துள்ள மற்ற பரிகாரங்களும் சரியானதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.