எனது பேத்தியின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவரது கல்வி, வேலைவாய்ப்பு, மணவாழ்க்கை, எதிர்காலம் பற்றிக் கூறுங்கள்..!
By DIN | Published On : 09th July 2021 03:47 PM | Last Updated : 09th July 2021 03:47 PM | அ+அ அ- |

எனது பேத்தியின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவரது கல்வி, வேலைவாய்ப்பு, மணவாழ்க்கை, எதிர்காலம் பற்றிக் கூறுங்கள்..!
-வாசகர், வெற்றி நகர்.
உங்கள் பேத்திக்கு மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், லக்னாதிபதி, குடும்பாதிபதி சனி பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு.
ஐந்து மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் மூலத்திரிகோணம், ருசக யோகம் பெற்றிருக்கும் சுகாதிபதியான செவ்வாய் பகவானுடனும், மூன்று, பன்னிரண்டாம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவானுடனும் இணைந்திருக்கிறார். இதனால் குரு மங்கள யோகம் உண்டாகிறது.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சூரிய (புத ஆதித்ய யோகம்) பகவான், கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை பன்னிரண்டாம் வீடான தன் மூலத்திரிகோண வீட்டின் மீதும் படிகிறது.
தற்சமயம் ராகு பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதாலும், தொடர்வதும் பலமான புக்திகளாக அமைவதாலும் கல்வி, வேலைவாய்ப்பு, மண வாழ்க்கை சிறப்பாக அமையும். எதிர்காலம் மேன்மையுறும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.