எனக்கு 40 வயதாகிறது. பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் திருமணம் நடக்கவில்லை. எப்பொழுது திருமணம் நடக்கும்? பரிகாரம் கூறவும்!
By DIN | Published On : 14th January 2022 05:37 PM | Last Updated : 14th January 2022 05:37 PM | அ+அ அ- |

எனக்கு 40 வயதாகிறது. பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் திருமணம் நடக்கவில்லை. எப்பொழுது திருமணம் நடக்கும்? பரிகாரம் கூறவும்!
-வாசகர், ஒட்டன்சத்திரம்.
உங்களுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னாதிபதி, அஷ்டமாதிபதி செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற தைரிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.
பூர்வ புண்ணியாதிபதி சூரிய பகவான் ராகு பகவானுடன் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி, அயன ஸ்தானாதிபதி குரு பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று தொழில் லாபாதிபதி ஆயுள் காரகரான சனி பகவானுடன் இணைந்திருக்கிறார்.
களத்திர நட்பு ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு.
தற்சமயம் குரு மஹாதசை நடக்கத் தொடங்கியுள்ளதாலும், சுயபுக்தி இன்னும் இரண்டாண்டுகள் நடக்க இருப்பதாலும், இந்த கால கட்டத்தில் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...