

நீரிழிவு நோய் யாரையெல்லாம் தாக்கும்? ஜாதகம் மூலம் அறிய முடியுமா? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
நீரிழிவு நோய் என்றால் என்ன என்பதை விளக்க மருத்துவர்களின் உதவியை பெற்றதன் அடிப்படையில் கருத்துக்களை ஓரளவு முதலில் தெளிவுபடுத்துகிறேன்.
கணையம் ( Pancreas) போதுமான அளவு அல்லது எந்த ஹார்மோனும் இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் திறம்படச் செயல்படாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயில், இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மிக அதிகமாக ஏற்படுத்துகிறது.
PANCREASஎனும் கணையம் என்பது 15 சென்டிமீட்டர் நீளமுள்ள, சாம்பல் நிற இளஞ்சிவப்பு நிறத்தில், சுமார் 85 கிராம் எடை கொண்ட ஒரு சுரப்பி. இது வயிற்றுக்குப் பின்னாலும், முதுகுத்தண்டின் முன்னாலும் அமைந்துள்ளது மற்றும் செரிமான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இன்சுலினை உற்பத்தி செய்து இரத்த சர்க்கரையைச் சரியான அளவில் வைத்திருக்கிறது. இன்சுலின் உற்பத்தி செய்யப்படாதபோது இது நடக்காது, இதன் விளைவாக ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார். நீரிழிவு நோயில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன.
1. இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்
2. இன்சுலின் சார்பு அல்லாத நீரிழிவு நோய்
3. கர்ப்பகால நீரிழிவு நோய்
கர்ப்பகால நீரிழிவு நோய் என்பது பிள்ளை பெறும் காலத்தில் 4% வீதம் பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதாக US தரவுகள் மூலம் அறியப்படும் ஒரு செய்தி, அதனால் இதனை நாம் இந்த கட்டுரையில் அலச வேண்டாம்.
மீதமுள்ள இரு வகைகளை மட்டும் ஜோதிட ரீதியாக அறிந்து கொள்ளலாம். அந்த இருவகைகளை TYPE-1/வகை 1 மற்றும் TYPE-2/வகை 2 ஆகும்.
இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் வகை 1 (TYPE -1)
வகை 1 நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட (வாழ்நாள் முழுவதும்) நோயாகும், இது கணையம் மிகக் குறைவாக உற்பத்தி செய்யும்போது அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்த சர்க்கரை அளவுக்கு ஏற்ப இன்சுலின் இல்லாதபோது ஏற்படுகிறது.
வகை 1 நீரிழிவு நோயில், கணையத்தில் உள்ள இன்சுலினை உருவாக்கும் செல்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் கடுமையான இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது உடல் கணையத்தில் உள்ள அதன் சொந்த செல்களைத் தாக்கி அழிப்பதன் விளைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது - இது ஒரு ஆட்டோ இம்யூன் எதிர்வினையாக அறியப்படுகிறது.
ஆய்வுகளின்படி இது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொருவருக்கு எலும்பு மஜ்ஜை மூலம் பரவலாம் என அறியப்படுகிறது. இந்த நோயாளிகளுக்கு சிறந்த மஜ்ஜை உற்பத்தியின் மூலம் நோயினை கட்டுப்படுத்தவும், அகற்றவும் முடியும் என ஆய்வுகள் தெரிய வருவதால் அதற்கான சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் முக்கியமான ஒன்று எலும்பு மஜ்ஜை என்பது செவ்வாய்க்கு காரகமாகிறது. கால புருஷ தத்துவத்தின் படி PANCREAS எனும் கணையம் , 5 ஆம் வீட்டைக் குறிப்பதாகும்.
எலும்பு மஜ்ஜை குறைபாட்டிற்குப் பலவிதமான காரணங்கள் இருக்கும், அதனைச் சிறந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் சரிசெய்து கொள்ளலாம்.
வகை 1 நீரிழிவு நோயின் ஜோதிட அறிகுறிகள்
1. பாதிக்கப்பட்ட சுக்கிரன் (துஸ்தானத்துடன் தொடர்புடையது, அல்லது சிதைந்த (அஸ்தங்கம் அடைந்த) அல்லது பிற்போக்குத்தனமான, அல்லது பாபகர்த்தரியில்)
2. பாதிக்கப்பட்ட செவ்வாய் கிரகம் (துஸ்தானத்துடன் தொடர்புடையது, அல்லது சிதைந்த அல்லது பிற்போக்குத்தனமான, அல்லது பாபகர்த்தரியில்)
3. பாதிக்கப்பட்ட 5 ஆம் வீடு / அதிபதி
4. ராகு ஏதோ ஒரு வகையில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருவரையும் பாதிப்படையச் செய்தல்
5. சுக்கிரன், செவ்வாய் மற்றும் ராகு ஆகியவை ஒன்றுக்கொன்று, ராசியில், டி-6 மற்றும் டி-30 இல் ஏதோ ஒரு வகையில், இணைக்கப்படுவது.
உதராண ஜாதகம்: TYPE - 1
1. துஸ்தானத்தில் (8) நிற்கும் செவ்வாய் சுக்கிரனை, 4 ஆம் பார்வையால் பார்த்தல். அதனால் சுக்கிரன் பாதிப்பு.
2. துஸ்தானத்தில் (8) நிற்கும் செவ்வாய். அதனால் செவ்வாய் பாதிப்பு.
3. செவ்வாய் தனது 7ஆம் பார்வையால் பாதிக்கப்பட்ட 5ஆம் அதிபதி சந்திரனைப் பார்த்தல்.
4. ராகு தனது 11 ஆம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தல். மேலும் ராகு தனது பாதையில் செவ்வாயையும், செவ்வாய் தனது பாதையில் ராகுவையும் எதிர் எதிர் (பயணப்படுதல்) முதலில் ஒன்றை ஒன்று தொடுதல் .
5. D-6 ல் செவ்வாய் தனது 4ஆம் பார்வையால் சுக்கிரனையும், 7 ஆம் பார்வையால் ராகுவையும் பார்த்தல் ...
6. D - 30 ல் செவ்வாய் தனது 4ஆம் பார்வையால் சுக்கிரனையும், 8 ஆம் பார்வையால் ராகுவையும் பார்த்தல் ...
மேற்படி ஜாதகத்தில் கிரக இணைவுகள் படி ஜாதகருக்கு TYPE -1 நீரிழிவு நோயால் பாதிப்படைவார் எனக் கணிக்கப்பட்டது. அது போல் ஜாதகர் தற்போது நீரிழிவு நோய்க்கான மருத்துவச் சிகிச்சையில் உள்ளார்.
இன்சுலின் சார்பு அல்லாத நீரிழிவு நோய் (TYPE - 2 )
வகை - 2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவாகக் காணப்படும்.
ஏறத்தாழ 90 % நீரிழிவு நோயாளிகள் இந்த வகையில் உள்ளவர்கள் தான்.
இந்த நோய் இருவகையில் தோன்றும்.
1. ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு. போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யப்படவில்லை.
2. இன்சுலின் எதிர்ப்பு. உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்தத் தவறினால் இந்தப் பிரச்னை குறைபாடுள்ள கொழுப்பு / தசை / கல்லீரல் செல்களுடன் தொடர்புடையது. அதிக எடை கொண்டவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, ஏனெனில் கொழுப்பு உடலின் இன்சுலினைப் பயன்படுத்தும் திறனில் தலையிடுகிறது.
இன்சுலின் எதிர்ப்புக்கான முதன்மை சிகிச்சை உடற்பயிற்சி மற்றும் எடை இழப்பு. அதிகரித்த உடற்பயிற்சி செவ்வாய்க் கிரகத்தை வலுப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம்.
எடை இழப்பு (உடல் எடையை நிர்வகித்தல்) என்பதை வியாழனின் தீங்கு விளைவிக்கும் விளைவைக் குறைப்பதாகக் கொள்ளலாம்.
கொழுப்பு செல்கள் மற்றும் கல்லீரல் செல்கள் வியாழனைக் குறிக்கின்றன. தசை செல்கள் சனியைக் குறிக்கின்றன. எனவே, வியாழன், செவ்வாய் மற்றும் சனியுடன் உள்ள உறவில் இந்த சிக்கலைக் காணலாம்.
மேற்கூறிய இந்த செல்கள் தான் இரத்தத்தில் உள்ள இன்சுலினுடன் தொடர்பு கொள்ளும்.
வகை 2 (TYPE-2) நீரிழிவு நோயின் ஜோதிட அறிகுறிகள்
1. பாதிக்கப்பட்ட குரு (துஸ்தானத்துடன் தொடர்புடையது, அல்லது சிதைந்த அல்லது பிற்போக்குத்தனமான, அல்லது பாபகர்த்தரியில்)
2. பாதிக்கப்பட்ட செவ்வாய் (துஸ்தானத்துடன் தொடர்புடையது, அல்லது சிதைந்த அல்லது பிற்போக்குத்தனமான, அல்லது பாபகர்த்தரியில்)
3. சனி / ராகு , குரு மற்றும் செவ்வாய் இருவரையும் ஏதோ ஒருவகையில் பாதித்தால்
4. குரு, செவ்வாய் மற்றும் சனி / ராகு ஒன்றுக்கொன்று, ஏதோ ஒரு வகையில் அல்லது வேறு ராசியில், D-6 மற்றும் D-30 இல் இணைக்கப்பட்டால்.
உதாரண ஜாதகம் : TYPE - 2
குரு - 12 ஆம் அதிபதி.
மேலும் சனியின் 7 ஆம் பார்வையில் குரு.
செவ்வாய் - 8 ஆம் அதிபதி (அஷ்டமாதிபதி)
செவ்வாய் , மிக நெருக்கத்தில் ராகு உடன் இணைவு.
சஷ்டாம்சம் D-6
குரு செவ்வாய் வீட்டில் , சனியின் 10 ஆம் பார்வையில் .
செவ்வாய் , மிக நெருக்கத்தில் ராகு உடன் இணைவு.
த்ரிம்சாம்சம் D-30
குரு செவ்வாய் வீட்டில் ராகுவுடன் இணைந்த செவ்வாயை , சனியின் 3 ஆம் பார்வை.
சிறு வயதில் வகை 1 நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலப்போக்கில் வகை 2 நோயாளிகளாக அவர்களின் உணவு பழக்கவழக்கத்தால் மாற வழி உண்டு.
நீரிழிவு நோயாளிகளை ஜாதக அட்டவணையில் தேடும்போது குழப்பத்தைத் தவிர்க்கவும்.
காரணம் வெகு ஜாக்கிரதையாக ஆய்வு செய்திடும்போது தான் சிலர் ஜாதகத்தில் மேலோட்டமாக நீரிழிவு நோய் இருப்பதுபோல் தெரிந்தாலும் நிச்சயம் அவர்களுக்கு நீரிழிவு தாக்கம் இருக்காது.
உதாரணமாக நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஜாதகம் இதை மெய்ப்பிக்கும். அவருக்கு நீரிழிவு நோய் கிடையாது. அதற்கான ஜோதிட காரணங்கள் கீழே பார்க்கலாம்.
மேற்படி ஜாதகத்தில், செவ்வாய்க் கிரகம் பற்றி ஆய்வு செய்தால்,
* செவ்வாய், துர்ஸ்தானம் சொந்தமாக இல்லை.
* செவ்வாய், துர்ஸ்தானம் ஆக்கிரமிப்பும் செய்யவில்லை
* எந்த துர்ஸ்தான அதிபதியுடனும் செவ்வாய் இணையவில்லை
* செவ்வாய் நீச்சம் அடையவில்லை
* செவ்வாய் வக்கிரம் அடையவில்லை
* இரு பாப கிரகங்களுக்கிடையில் (பாப கர்தரியில்) செவ்வாய் இல்லை.
ஒன்றே ஒன்று செவ்வாய் தனது பகை வீடான புதன் வீட்டில் இருப்பது மட்டுமே. இதனைப் புறம் தள்ளி விடலாம், காரணம் இது ஒன்றும் பெரிய அளவில் பாதிப்பைத் தராது. மேலும் இவரின் ஜாதகத்தில் சந்திரன், குரு, சுக்கிரன் ஆட்சி அடைவதாலும்; லக்கின அதிபதி சந்திரனே இங்கு ஆட்சி மற்றும் எந்த தீய பார்வையையும் பெறாத காரணத்தால் ஆகும்.
இதைத் தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய 7 கிரகங்களும் தொடர்ச்சியாக நான்கு முதல் ஏழு ராசிகளில் இருப்பின் "கிரக மாலிகா" எனும் யோகம் உள்ளதைக் காண முடிகிறது. இது சுகபோக வாழ்வு அளிப்பதாகும்.
இதன்படி பார்த்தால் ஜவஹர்லால் நேரு ஜாதகத்தில் நீரிழிவு நோய் வராது / இல்லை எனக் கூறலாம் ஆனால் நீரிழிவு நோய்க்கும் இவரின் ஜாதகத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது அது தான் "உலக நீரிழிவு நோய் தினம்" இவரின் பிறந்த தேதி ஆன 14 நவம்பர் தான் உலகெங்கிலும் நீரழிவு நோய் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்."
தொடர்புக்கு : 98407 17857, 91502 75369
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.