கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்! அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மிதுனம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது..

News image

மிதுன ராசி

Updated On :21 மே 2026, 4:11 pm IST

2026 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 26-ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2-ஆம் தேதியும் பெயர்ச்சியாகின்றது.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மிதுன ராசியில் பிறந்த அன்பர்களே நீங்கள் எப்போதும் எல்லாருக்கும் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். எந்த காரியம் செய்தாலும் பிறர் நம்பும்படி செய்பவர்கள். முதிர்ந்த ருசியுடன் கூடிய உணவை உண்பார்கள். வாழ்க்கையில் ஏற்படும் தாழ்வு முன்னேற்றம் இரண்டையும் ஒரேமாதிரியாக எடுத்துக் கொள்வார்கள். உடல் வலிமை உள்ளவர்கள். எந்த காரியத்தையும் திட்டமிட்டுச் செய்து அதில் வெற்றியும் பெறுவார்கள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவீர்கள். கம்பீரமான நடை உள்ளவர்கள்.

கிரகநிலை

26.05.2026 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் தொழில் ஸ்தானம் - தனது ஏழாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானம் - தனது ஒன்பதாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

பலன்கள்

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் தனவாக்கு ராசியில் இடம் பெற்றுள்ளார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர். அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பர்.

பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமீன் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். அனைத்திலும் விரையம், எந்த பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது.

கடுஞ்சொற்களை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்து பாருங்கள். நண்பர்கள் தேவைதான். தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், ஆனால் உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருக்கும். இனி அந்த பயம் வேண்டாம். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பது இருக்கட்டும்.

முதலில் நீங்கள் நன்று படியுங்கள். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம்.

விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே க்ஊடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷணாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல ப்எயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. வியாபாரிகள் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது.தொழிலாளர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு

அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமதநிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம். குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர்.

மாணவர்கள்

படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.

மிருகசீரிஷம் - 2, 3

இந்த பெயர்ச்சியால் வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை

இந்த பெயர்ச்சியால் வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.தொழிலில் திறமை அதிகரிக்கும். உபதொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் - 1, 2, 3

இந்த பெயர்ச்சியால் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

பரிகாரம்

புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

Summary

மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 | Mithunam Guru Peyarchi Palangal 2026 in Tamil