சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 9

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 11:00 am

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.

குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும்.

பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு தங்களது நண்பர்கள் மூலமாக நடக்க வேண்டிய நேரத்தில் சரியான நேரத்தில் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான  உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: முருகனை தரிசித்து விட்டு வாருங்கள். வெற்றி உண்டாகும்.