வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை
இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார்.
மூன்றாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்
மேஷ ராசி அன்பர்களே, இந்த சனி பெயர்ச்சியால் உங்களின் கல்வியறிவு பயனுள்ள விஷயத்தில் பிரகாசமாக ஒளிவிட்டு உங்களின் வாழ்க்கை முறையில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும். நற்காரியங்களை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரம் உறவினர்கள் வகையிலிருந்தும், செய்தொழில் லாபத்திலிருந்தும் நிறைவாக கிடைக்கும். கால தாமதமான செயல்திட்டங்களை புதிய உத்வேகத்துடன் செயல் படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள்.
குடும்பத்தில் தாய் மாமன் வகை உறவினர்களுடன் மனக் கசப்பு வராத வண்ணம் நல்முறையில் பழக வேண்டும். தாயின் அன்பைப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்வு உண்டாகும். குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்று காலம் கணிந்துள்ளது. நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள்
அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள். கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். முடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். கவனமுடன் செயல்பட்டு விரயத்தை தவிர்க்கலாம்.
தொழிலதிபர்கள்
தொழில் வகையில் கூடுதல் வருமானம் கிடைக்க உங்கள் சகோதரர்கள் தகுந்த உதவி புரிவார்கள். நண்பர்களும், ஆன்மீக அருள் பெற்றவர்களும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் பெறும் வகையிலான உபாயங்களை சொல்லித் தருவார்கள். கடன், வழக்கு, எதிரிகள் ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது.
பெண்கள்
குடும்ப நிர்வாகப் பொறுப்பிலுள்ள பெண்கள் நிறைய நற்காரியங்களில் ஈடுபட்டு கணவரிடமும், பிள்ளைகளிடமும் நல் அன்பை பெறுவீர்கள். பழைய ஆபரணங்களை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் முழுமனதுடன் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
கலைஞர்கள்
ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் ஆலோசனைப் படி நடந்து வெற்றியைப் பெறலாம். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
அரசியல்வாதிகள்
யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.
மாணவர்கள்
முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
அஸ்வினி
இந்த சனி பெயர்ச்சியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
பரணி
இந்த சனி பெயர்ச்சியால் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
கார்த்திகை 1ம் பாதம்
இந்த சனி பெயர்ச்சியால் வீண் செலவுகள் உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
பரிகாரம்
துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மீனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மகரம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: தனுசு

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: ரிஷபம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


