FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

ஆடி மாதப் பலன்கள் - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

News image
Updated On :17 ஜூலை 2026, 5:36 pm IST

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய  ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், குரு - பஞ்சம  ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், கேது - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக  ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்:

31-07-2026 அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

01-08-2026 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-08-2026 அன்று சுக்ரன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உங்களை நாடி வருபவர்களை நன்கு உபசரித்து வேண்டிய உதவிகளை செய்யும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம்.  ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது.

கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.  வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.  வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.  

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன்  சுமுகமாக பேசி பழகுவது நல்லது.

கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.

அஸ்வினி:

இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும்.  எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பரணி:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 17, 18; ஆக 13, 14, 15

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.