நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஜூலை மாத விற்பனை 21 சதவீத வளர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த மாதம் விற்பனையான வாகன எண்ணிக்கை 1,65,346 ஆகும். அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே மாத விற்பனையில் இது சாதனை அளவாகும்.
மாருதி சுஸுகி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது: கடந்த ஜூலை மாதம் உள்நாட்டில் விற்பனை எண்ணிக்கை 22 சதவீதம் வளர்ச்சி பெற்று, 1,54,001 ஆக இருந்தது. ஆல்டோ, வேகன்-ஆர் உள்ளிட்ட மினி ரக கார்களின் விற்பனை 20 சதவீதம் உயர்வு பெற்று 42,310 ஆக இருந்தது.
ஸ்விஃப்ட், எஸ்டிலோ, டிஸையர், பலேனோ, இக்னிஸ் உள்ளிட்ட காம்பாக்ட் பிரிவில் 25 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. அந்தப் பிரிவில் விற்பனை எண்ணிக்கை 63,116 ஆகும். சியாஸ் உள்ளிட்ட செடான் கார்கள் விற்பனை 23 சதவீதம் அதிகரித்தது. எர்டிகா, எஸ்-கிராஸ், விடாரா, பிரெஸ்ஸா உள்படும் எஸ்யுவி ரக வாகன விற்பனை 48 சதவீதம் அதிகரித்தது. ஆம்னி, ஈக்கோ ஆகிய வேன் மாடல்களின் மொத்த விற்பனை 15,714 ஆகும்.
ஜூலை மாத மொத்த வாகன விற்பனை 21 சதவீத வளர்ச்சி பெற்றது. விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 1,65,346. இது நிறுவனத்தின் வரலாற்றில் சாதனை அளவாகும். ஜூலை மாதம் ஏற்றுமதியான வாகனங்களின் எண்ணிக்கை 11,345 ஆக இருந்தது என்று மாருதி சுஸுகி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை
தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


