2023ல் இந்தியாவில் வரவிருக்கும் ஹூண்டாய் கார்கள்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஐயோனிக் 5  எலக்ட்ரிக் காரயை ஆட்டோ எக்ஸ்போ 2023ல் அறிமுகப்படுத்தியது.
2023ல் இந்தியாவில் வரவிருக்கும் ஹூண்டாய் கார்கள்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஐயோனிக் 5 என்ற ரக மின்னனு காரை ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அறிமுகப்படுத்தியது. மேலும் புதிய வாகனங்களுக்கான விவரங்களையும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. 

இந்தியாவில் 2023ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் முதல் 5 ஹூண்டாய் கார்களின் ஒர் பார்வை.

2023ல் இந்தியாவில் வரவிருக்கும் ஹூண்டாய் கார்கள்:

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா இந்தியாவில் மார்ச் 21, 2023 அன்று அறிமுகப்படுத்தப்படும். இதன் பிரத்யேக வடிவமைப்பு புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும். புதிய வெர்னா பெட்ரோல் மாடலாக மட்டுமே இருக்கும். டீசல் எஞ்ஜின் இதில் இடம் பெறாது.

இதன் புதிய 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5-லிட்டர் நேட்சுரல் - ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கும். இதன் இரண்டு என்ஜின்களும் ஆர்டிஇ - இணக்கமானதும் மற்றும் இ20 எரிபொருள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட் கடந்த ஆண்டு உலகளவில் அறிமுகமானது.

இது அளவில் பெரியதும் அதன் வடிவமைப்பில் பல மாற்றங்களைப் பெறுகிறது. இந்தியாவில் கோனா  எலக்ட்ரிக் கார் தற்போது 39.2 kWh பேட்டரி திறனைப் பெறுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 452 கி.மீ. தூரம் வரை செல்லும் எனக் கூறப்படுகிறது. 

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தில் சமீபத்தில் இந்தியாவில் க்ரெட்டா எஸ்யூவி ஆர்டிஇ மற்றும் இ20-இணக்கமான எஞ்ஜின் பெறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட க்ரெட்டாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட க்ரெட்டா டியூசன், ஸ்டைலிங் மற்றும் மேம்பட்ட அமைப்புகள் உள்பட புதிய அம்சங்களைப் பெறும். இந்த காரானது 1.4 லிட்டர் யூனிட்டுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஸ்டார்கேசர் எம்பிவி

ஹூண்டாய் ஸ்டார்கேசர் எம்பிவி (MPV) கடந்த ஆண்டு உலகளவில் அறிமுகமானது. இது தற்போது இந்தோனேஷிய சந்தையில் கிடைக்கிறது மற்றும் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்டார்கேசர் காரானது ஹூண்டாய் அல்காஸருக்குக் கீழே வரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கியா கேரன்ஸ், மாருதி சுசுகி எர்டிகா போன்றவற்றுக்கு போட்டியாக இந்த கார் இருக்கும். 

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி

ஹூண்டாய் நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை எஸ்யூவியாக இருக்கும். ஹூண்டாய் நிறுவனத்தில் வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவி கிராண்ட் ஐ10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வெளிநாடுகளில் விற்கப்படும் காஸ்பர் வடிவமைப்பு குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்.

ஹூண்டாயின் சமீபத்திய சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் டாடா பஞ்ச், சிட்ரோயன் சி3 போன்றவற்றை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com