ஹீரோ மேஸ்ட்ரோ ஸூம் 110 ஸ்கூட்டர் வெளியீட்டு தேதி உறுதியானது

ஹீரோ மேஸ்ட்ரோ ஸூம் 110 என்ற புதிய ஸ்கூட்டரை 30 ஜனவரி 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ஹீரோ மேஸ்ட்ரோ ஸூம் 110 ஸ்கூட்டர் வெளியீட்டு தேதி உறுதியானது
Updated on
1 min read

ஹீரோ மேஸ்ட்ரோ ஸூம் 110 என்ற புதிய ஸ்கூட்டரை 30 ஜனவரி 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, இது தற்போதுள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் 110ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். 

இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் என பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹீரோ மேஸ்ட்ரோ ஸூம் 110 அறிமுகம் செய்யப்படவுள்ளது.

புதிய மாடல் ஸ்கூட்டரில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலில் வழங்கப்பட்ட அதே 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. இந்த புதிய 110சிசி, ஏர்-கூல்டு மோட்டார் 8.04 பிஎச்பி மற்றும் 8.7 என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும்.

இருப்பினும், 10-இன்ச் பின்புற சக்கரத்தை உள்ளடக்கிய மேஸ்ட்ரோ எட்ஜ் போலல்லாமல், இரு முனைகளிலும் 12-இன்ச் அலாய் வீலுடன் சுழற்சிப் பகுதிகளின் அடிப்படையில் இது ஸ்போர்ட்டியாக இருக்கலாம். ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் வழக்கமான ஷாக் அப்சார்பர் இருக்கும். இதன் பிரேக்கிங் சிஸ்டத்தில் முன் மற்றும் பின் டிரம் பிரேக்குகள் இருக்கும்.

இந்த ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன், கால் அலெர்ட், ட்ராக்கிங், ஐடல் ஸ்டார்ட், ஸ்டாப் வசதி, கார்னெர் லேம்ப் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலையானது ரூ. 80,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் ஸ்கூட்டர் ஹோண்டா டியோவிற்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com