ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் வகையில் புதிய வாகனம் அறிமுகம்!

இரு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் (XTEC) டெக்னாலஜி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
2023 Hero Super Splendor XTEC launched
2023 Hero Super Splendor XTEC launched

இரு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக்(XTEC) டெக்னாலஜி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இளம் வாடிக்கையாளர்களின் தேவையை மனதில் கொண்டு புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. 

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் டிரம் பிரேக் வகை வாகனம் விலை ரூ.83,368 ஆகவும், டிஸ்க் பிரேக் வகை ரூ.87,268 விலையிலும் தற்போது கிடைக்கிறது.

இந்த புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கில் பொசிஷனிங் விளக்குகளுடன் எல்இடி முகப்பு விளக்கு, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உடன் எரிபொருளின் அளவை அளவீடும் மீட்டர், சர்வீஸ் ரிமைண்டர், பைக் செயலிழப்பு இண்டிகேட்டர் மற்றும் எஸ்எம்எஸ் வசதியுடன் புளூடூத் இணைப்பைும் பெறுகிறது. பயணத்தின்போது மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் ரீதியாக, மோட்டார் சைக்கிள் முன்பு  இருந்ததைப் போலவே உள்ளது. 1255சிசி பிஎஸ்6 எஞ்சின் கொண்ட ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் தருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.7 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டத்துடன் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி கொண்டதாகும் இந்த பைக். இதில் டியூபுலர் டைமென்ட் பிரேம், முன்பக்க டிஸ்க், டியூப்லெஸ் டயர் வசதி, டெலெஸ்கோபிக் ஹைட்ராலிக் சஸ்பென்ஸன் மற்றும் ட்ரம் பிரேக் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com